fbpx
Homeபிற செய்திகள்கர்நாடகாவிற்கு கடத்த முயன்ற 12 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கர்நாடகாவிற்கு கடத்த முயன்ற 12 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் நேற்று முன்தினம் மாலை கிருஷ்ணகிரி & பெங்களூர் செல்லும் சாலையில் உள்ள கிருஷ்ணகிரி குறிஞ்சி மகால் பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது மகேந்திரா பிக் அப் வேன் மூலம் ரேஷன் அரிசி மூட்டைகளாக கொண்டுவரப்பட்டு, மினி வேனில் ஏற்றிக் கொண்டிருந்தனர். அப்போது போலீசாரை பார்த்தவுடன் தப்பி ஓடிய 4 பேரை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த துரை என்பவர், சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருப்பவர்களிடம் ரேஷன் அரிசியை வாங்கி, கிருஷ்ணகிரியில் இருந்து கர்நாடகாவிற்கு அனுப்பி விற்று வந்தது தெரியவந்தது.

இதையடுத்து அங்கிருந்த 12 டன் ரேஷன் அரிசியையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.


மேலும், இந்த கடத்தலில் ஈடுபட்ட கிருஷ்ணகிரி கருங்கல்நத்தம் பகுதியை சேர்ந்த செந்தில்குமார்(வயது 27), அதே பகுதியை சேர்ந்த ரத்தினவேல்(20), சிங்காரப்பேட்டை விஜய்(21), கிருஷ்ணகிரி சுரேஷ்(25) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள துரை என்பவரை தேடி வருகின்றனர்.

கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் மற்றும் ரேஷன் அரிசியை உணவு பொருள் கடத்தல் குற்றத்தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசி, சப்&இன்ஸ்பெக்டர் சிவகாமி உள்ளிட்ட தனிப்படையினரிடம் ஒப்படைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

படிக்க வேண்டும்

spot_img