fbpx
Homeபிற செய்திகள்800 கிராம் எடை குழந்தைக்கு நுண்துளை அறுவை சிகிச்சை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சாதனை

800 கிராம் எடை குழந்தைக்கு நுண்துளை அறுவை சிகிச்சை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சாதனை

ஈரோட்டை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு 6.5 மாதத்தில் இரட்டை பெண் குழந்தைகள் கடந்த மார்ச் மாதத்தில் பிறந்தன. முதல் குழந்தை 800 கிராம் எடை மட்டுமே இருந்தது. இந்த குழந்தைக்கு இதயத்திலிருந்து நுரையீரலுக்கு செல்லும் ரத்தக் குழாய் முற்றிலும் அடைபட்டிருந்தது பரிசோதனையில் தெரிய வந்தது

இரண்டாவது குழந்தையை இழந்த பின்னர், இந்த ஒரு குழந்தையையாவது காப்பாற்ற வேண்டும் என பெற்றோர் விரும்பினர்.
ஈரோட்டிலிருந்து இந்த குழந்தை கோவை ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு, குழந்தைகளின் உயிர் காக்கும் கருவிகளான இன்குபேட்டர், வெண்டிலேட்டர் கொண்ட ஆம்புலன்சில் கொண்டுவ ரப்பட்டது.

கோவை ஸ்ரீராமகிருஷ்ணா மருத் துவமனையில் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக் கப்பட்ட இந்த குழந்தையை, மருத்து வர்கள் சித்தார்த்த புத்தவரபு, சுஜா மரியம் மற்றும் செவிலியர்கள் குழு பாதுகாத்தனர். குழந்தை இருதய அறுவை சிகிச்சைக்குத் தயாரானது.

நீண்ட காத்திருப்புக்குப்பின், குழந்தையின் நிமோனியா, ரத்தத்தில் நச்சுத்தன்மை, சர்க்கரை குறைவு போன்றவை சரி செய்யப்பட்டது. நீண்ட நாட்கள் வென்டிலேட்டரில் இருந்த குழந்தையின் உடல் நலம் மேம்பாடு அடைந்தது. ஆனால், இருதயத்தில் ஏற்பட்ட சிக்கல், மோசமடையத் துவங்கியது.

குழந்தைக்கு ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறையத்தொடங்கியது. எனவே உடனடியாக துளை திறவுகோல் சிகிச்சை செய்து குழந் தையைக் காக்க மருத்துவர்கள் முடிவு செய்தனர்.
வழக்கமாக திறப்பு வால்வுகள் 5 மி.மீ.,அளவு உள்ளதாக இருக்கும். ஆனால், இந்த குழந்தைக்கு 1 மி.மீ.,மட்டுமே இருந்தது என்றார் குழந்தைகள் இருதய நல மருத்துவர் டாக்டர் எஸ். தேவபிரசாத்.

குழந்தைகள் நல இருதய சிகிச்சை மருத்துவர் தேவபிரசாத், மயக்கவியல் நிபுணர் மருத்துவர் மேனன், மருத்து வர் மணிகண்டன், கதிரியக்க வியல் மருத்துவர் முத்துராஜன் ஆகியோர் இணைந்து, நுண்துளை அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்த னர்.
மிகவும் சிக்கலான, நுண்ணிய அளவிலான ரத்தக் குழாய்களில் சிகிச்சை செய்வது மருத்துவர்களுக்கு சவாலாக இருந்தது. குழந்தையின் கழுத்து பகுதியில் உள்ள ரத்த குழாய் வழியாக பலூன் செலுத்தி, ரத்தகுழாயில் ஏற்பட்டிருந்த அடைப்பை நீக்கி, அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிக்கப்பட்டது.

மருத்துவர்கள் சித்தார்த்த புத்தவரபு, சுஜா மரியம் ஆகியோர் குறிப்பிடுகையில், “மிகவும் சிறிய அளவிலான இந்த குழந்தை, குறை பிரசவத்தில் சிக்கல்களோடு மட்டுமில்லாமல், எடையிலும் குறைவாக இருந்தது. குழந்தையை வெண்டிலேட்டரின் உதவியோடு கொண்டு வருவதும் கடினமாக இருந்தது. அதன் பின்னர், நிமோ னியா, ரத்தத்தில் நச்சுக்கள் போன்றவை நம்பிக்கை இழக்கச் செய்தன.

ஆனால், இந்த குழந்தை ஒரு போராளி. எங்களது மருத்துவர்களும், செவிலியர்களும் மேற்கொண்ட தீவிர முயற்சியால் சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொள்ள முடிந்தது.
தற்போது குழந்தை நல்ல முறையில் உள்ளது. அவர்களது பெற்றோர்களுடன் குழந்தையை வீட்டுக்கு அனுப்பி வைப்பது எங்களுக்கு மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது,” என்றனர்.
“இத்தகைய குறைந்த எடையில் உள்ள சிறிய அளவிலான சிசுக்களுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்வது மிகவும் அரிதானது.

பெரும்பாலும் இதுவரை 1.2 கிலோ முதல் 1.5 கிலோ எடையுள்ள குழந்தைகளுக்கு மட்டுமே சர்வதேச அளவில் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மருத்துவ வரலாற்றிலேயே மிகவும் எடை குறைவான குழந்தைக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது இதுவாகத்தான் இருக்கும். குழந் தையின் எடை 1.4 கிலோவாக உயர்ந்த பின், வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவார்,” என்கிறார் மருத் துவர் எஸ்.தேவபிரசாத்.

தமிழ்நாட்டின் மேற்கு மண்டலத்திலேயே குறைபிரசவ குழந் தைகளுக்குத் தீவிர சிகிச்சைக்கான கருவிகளுடன் ஆம்புலன்ஸ் வசதி கோவை ஸ்ரீராமகிருஷ்ணா மருத்து வமனையில் தான் உள்ளது குறிப்பி டத்தக்கது.

படிக்க வேண்டும்

spot_img