fbpx
Homeபிற செய்திகள்தமிழக சட்டப்பேரவையில் இன்று கவர்னர் பன்வாரிலால் புரோஹித் உரை: முதல்வர் ஸ்டாலினுக்கு ஆலோசனை வழங்க பொருளாதார...

தமிழக சட்டப்பேரவையில் இன்று கவர்னர் பன்வாரிலால் புரோஹித் உரை: முதல்வர் ஸ்டாலினுக்கு ஆலோசனை வழங்க பொருளாதார நிபுணர் குழு

தமிழ்நாட்டின் பொரு ளாதார வளர்ச்சியை மேம்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆலோ சனை வழங்க நோபல் பரிசு பெற்றவர் உள்பட 5பேர் அடங்கிய நிபுணர் குழு அமைக்கப்பட உள்ளது என சட்டசபையில் கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தனது உரையில் தெரிவித்தார்

இது தொடர்பாக சட்டப்பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேசியதாவது: கடந்த சில ஆண்டுகளில் தமிழ்நாட்டின் பொரு ளாதார வளர்ச்சி மந்தநி லையில் உள்ளதைக் காண்கிறோம்.

இந்தப் போக்கை மாற்றியமைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் இந்த அரசு மேற்கொள்ளும். வரும் சில ஆண்டுகளுக்கு மட்டுமே கிடைக்கக்கூடிய மனிதவளத்தின் பலன்களை முழுமையாகப் பயன்படுத்தி, விரைவான பொருளாதார வளர்ச்சியை அடைய முற்படுவோம்.

இந்த வளர்ச்சி இலக் குகளை எட்டுவதற்கானப் பாதையை வகுத்து தமிழக அரசிற்கு தகுந்த ஆலோ சனைகளை வழங்கிட ‘முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோ சனைக் குழு’ ஒன்றை அமைக்க இந்த அரசு முடிவு செய்துள்ளது.

அமெரிக்காவின் மசாசூ செட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தின் பேராசிரியரும் நோபல் பரிசு பெற்றவரு மான எஸ்தர் டப்லோ, இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் பேராசிரியர் ரகுராம் ராஜன், ஒன்றிய அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் டாக்டர். அரவிந்த் சுப்ரமணியன், பொருளாதார நிபுணர் பேராசிரியர் ஜான் ட்ரீஸ், முன்னாள் ஒன்றிய நிதிச் செயலாளருமான டாக்டர் எஸ். நாராயண் ஆகிய உலகின் தலைசிறந்த பொருளாதார அறிஞர்கள் இந்தக் குழுவில் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

இக்குழுவின் பரிந்துரை களின் அடிப்படையில், மாநிலத்தின் பொருளாதா ரத்தை மீண்டும் எழுச்சி பெற செய்து, பொருளாதார வளர்ச்சியின் பயன்கள் அனைத்துத் தரப்பின ரையும் சென்றடைவதை இந்த அரசு உறுதி செய்யும்.

ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்ற அண்ணாவின் பொன்மொழிக்கு ஏற்ப திமுக அரசு செயல்பட்டு வருகிறது .எல்லா வளமும் கொண்ட மாநிலமாக தமிழ்நாட்டை மாற்ற இந்த அரசு உறுதியேற்றுள்ளது.
இவ்வாறு கவர்னர் தனது உரையில் தெரிவித்தார்.

இந்த கூட்டத் தொடரில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பட்டு அதன் மீது பேரவை உறுப்பினர்கள் உரையாற்றுவர். பேர வையில் உள்ள கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றாற் போன்று, அவையில் உறுப் பினர்களுக்கு பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படும்.

16வது சட்டப் பேரவையின் முதல் கூட்டத் தொடர் என்பதால், கேள்வி நேரம் நடைபெற வாய்ப்பில்லை என்று பேரவைத் தலைவர் மு.அப்பாவு ஏற்கெனவே தெரிவித்திருந்தர். உறுப்பினர்களிடம் இருந்து கேள்விகளைப் பெற்று அதனை துறைகளுக்கு அனுப்பி பதில்களைப் பெற காலம் தேவைப்படுவதால், கேள்வி நேரம் நடைபெறுவது கேள்விக்குறியே என அவர் கூறியிருந்தார்.

எனவே, தினமும் பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கியதுமே கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்களே நடைபெறும்.
மேலும் தமிழகத்தின் முக்கிய பிரச்னைகள் தொடர்பாக, சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சி, நீட் தோவு, ஏழு பேர் விடுதலை, செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி மையத்தை செயலாக்கத்துக்குக் கொண்டு வருவது போன்ற பிரச்னைகளில் மத்திய அரசை வலியுறுத்தி தமிழக அரசால் தீர்மானங்கள் கொண்டு வரப்பட உள்ளன.

இந்தத் தீர்மானங்கள் குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேற்றப்பட உள்ளன.
இந்த கூட்டத் தொடரில், கொரோனா நோய்த் தொற்று தொடர்பாக காரசார விவாதங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படிக்க வேண்டும்

spot_img