கோவை மாவட்டத்தில் இன்று கூடுதல் தளர்வுகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், நகர பகுதிகளில் பல்வேறு விதமான கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
கொரோனா ஊரடங்கால் தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீடித்து வருகிறது. இதில் பாதிப்பு அதிகம் உள்ள கோவை, திருப்பூர் நீலகிரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மட்டும் ஊரடங்கில் தளர்வுகள் தரப்படாமல் இருந்த நிலையில், இன்று முதல் கூடுதல் தளர்வுகள் அமலுக்கு வந்துள்ளது.
அதன்படி, கோவை மாநகரில் கடந்த 6 வாரங்களாக அனுமதிக்கப்படாத பல்வேறு கடைகள் மற்றும் நிறுவனங்கள் இன்று முதல் செயல்பட துவங்கியுள்ளன.
அதன்படி, தேநீர் கடைகள் திறக்கப் பட்டுள்ளன.
ஆனால் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை பார்சல் சேவைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப் பட்டுள்ளது.
இதே போல், மின் சாதன பொருட் கள் விற்பனை செய்யும் கடைகள், கல்வி உபகரணங்கள் விற்பனையகங்கள், கால ணிகள், பேன்சி மற்றும் ஜெராக்ஸ் கடைகள் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனைகடைகள் இன்று கோவையில் திறக்கப்பட்டு வருகின்றன.
தவிர, செல்போன் கடைகள், கட்டுமான பொருட்கள் விற்பனையகங்கள் உள்ளிட்ட கடைகளும் திறக்கப்பட்டு உள்ளன. மேற்கண்ட கடைகள் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அரசின் அத்தியாவசிய துறைகள் 100 சதவீத பணியாளர்களுடனும், தனியார் நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் 50 சதவீத பணியாளர்களுடனும் இயங்க உள்ளன.
கோவையில் உள்ள பூங்காக்கள் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளன.
கோவை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள காந்தி பூங்கா நடை பயிற்சிக்காக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இன்று திறக்கப்பட்டது.
மேலும் காந்தி பூங்காவில் உள்ள உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு திடல்களும் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
பூங்காக்கள் தமிழக அரசின் நிலையான வழிகாட்டு விதிகளைப் பின்பற்றி 50 சதவீதத்தினர் மட்டும் கொண்டு இயங்க அறிவுறுத்தப்பட்டு நிலையில், காந்தி பூங்காவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் நடை முயற்சிக்காக அனுமதிக்கப்படுகின்றனர்.
பூங்காவுக்கு வருபவர்களுக்கு ஊழியர்கள் கிருமிநாசினி வழங்கி உடல் வெப்ப நிலையை பரிசோதித்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.நீண்ட இடைவெளிக்கு பிறகு இன்று காலை முதல் பலர் இப்பூங்காவில் நடை பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.