இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்தியா செலுத்தி வந்த ஆளுமையை முடக்க சீனா திட்டமிட்டது. இலங்கையுடன் உறவை வலுப்படுத்திக் கொள்ள ரூ.10,400 கோடியில் கொழும்பு துறைமுக நகர திட்டத்தை கொண்டு வர ஒப்பந்தம் போட்டுக் கொண்டது.
கொழும்பு கரையையொட்டி உள்ள கடல் பகுதியில் 650 ஏக்கர் நிலப்பரப்பை மீட்டெடுத்துள்ளது. இதில் வானுயர கட்டிடங்களுடன் வணிக வளாகங்கள், கேளிக்கை விடுதிகளை அமைத்து அந்த நகரத்தில் சிறப்பு பொருளாதார மண்டலமாக நிறுவ திட்டமிட்டுள்ளது.
இந்த திட்டம் 2015ல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. 2019ல் கோத்தபய ராஜபக்சே, மகிந்த ராஜபக்சே மீண்டும் ஆட்சி அதிகாரத்திற்கு வர கொழும்பு துறைமுக திட்டம் மீண்டும் வேகம் எடுத்தது.
இதற்காக கொழும்பு துறைமுக நகர பொருளா தார ஆணையம் என்ற அதிகார அமைப்பு நிறுவப்பட் டது.
ஆட்சி அதிகாரத்துக்கு கட்டுப்படாத தனித்த அதிகார அமைப்பாக செயல்படும் தன்மை கொண் டதாக இந்த ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த நகரம் சீனாவின் தனி பிரதேசமாக தன்னாட்சி பெற்று திகழும். இலங்கை குடிமக்கள் இந்த நகரத்திற்குள் நுழைய வேண்டுமானால் நுழைவு விசா போன்ற சிறப்பு அனுமதி பெற வேண்டும்.
உள்ளூர் நாட்டு மக்களுக்கே இந்த நிலை என்றால் மேல்நாட்டில் இருந்து வரும் மக்களுக்கு என்ன நிலை என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை.
வரும் காலத்தில் கொழும்பு துறைமுகமே சீனாவின் கடற்படை தளமாக மாறிவிடும் அபாயம் உள்ளது. அப்படி மாறினாலும் யாரும் தட்டிக் கேட்க முடியாது.
இலங்கையையொட்டிய இந்திய மாநிலமாக தமிழ்நாடு இருப்பதால் சீனாவின் அச்சுறுத்தலை மறுக்க முடியாது. இந்தியாவுக்கு வரும் கப்பல்களில் 70 சதவீதம் கொழும்பு துறைமுகம் வழியாகத் தான் வருகின்றன.
அவற்றை கண்காணித்து ஏதாவது சதி வேலையில் சீனா ஈடுபட வாய்ப்பு உள்ளது.
இதனால் சீனாவிற்கு தெரியாமல் எந்த பொருளையும் இந்தியா ஏற்றுமதி செய்யவோ இறக்குமதி செய்யவோ முடியாது என சதித்திட்டம் போட்டுள்ளனர்.
இந்தியாவின் கடல் வாணிகமும் கடுமையாக பாதிக்கும் முன்பு கொழும்பில் உள்ள தரை தூதரகம் வழியாக உளவாளிகளை பாகிஸ்தான் அனுப்பி வைத்தது. அதே போல சீனாவும் தரை உளவாளிகளை தமிழக கடற்கரைகளுக்கு அனுப்பும் அபாயம் உள்ளது.
குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்தை இந்தியா அமைக்க உள்ளது. கொழும்பு துறைமுக நகரில் இருந்து 350 கி.மீ. தூரத்தில் தான் உள்ளது.
கூடங்குளம் அணுமின் நிலையம் ஐ.என்.எஸ், கட்டபொம்மன் மகேந்திரகிரி இஸ்ரோ வளாகம் மணவாளக்குறிச்சியில் உள்ள அரிய மணல் கலை ஆகியவையும் இந்திய நிலப்பரப்பில் உள்ளது.
இவற்றை சீனா எளிதாக கண்காணிக்கவும், வேவு பார்த்து நாச வேலையில் ஈடுபடுவதற்கான ஆபத்து உள்ளது.
வடகிழக்கில் அருணாச்சல பிரதேசம், வடக்கே லடாக் ஆகிய பகுதிகளில் அத்துமீறும் சீனா இனி தெற்கிலும் வாலாட்டும்.
குறிப்பாக தமிழ்நாட்டின் பாதுகாப்புக்கு இதுவரை இல்லாத அச்சுறுத்தல் ஏற்படும். இதனை முறியடிக்க இந்திய அரசு எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.