fbpx
Homeபிற செய்திகள்ரூ.86 கோடி கொரோனா நிவாரண நிதி, ரூ.8.73 கோடி மளிகை பொருட்கள் தொகுப்பு - முதல்வருக்கு...

ரூ.86 கோடி கொரோனா நிவாரண நிதி, ரூ.8.73 கோடி மளிகை பொருட்கள் தொகுப்பு – முதல்வருக்கு நீலகிரி மாவட்ட மக்கள் நன்றி

நீலகிரி மாவட்டத்தில் 2,16,086 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா பாதிப்பு நிவாரண உதவித் தொகை ரூ.86.43 கோடி மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் ரூ.8.73 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, நீலகிரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ்நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

07.05.2021 அன்று தமிழ்நாடு முதல்வராக பொறுப் பெற்றவுடன், மக்களின் வாழ்வில் புது ஒளியை ஏற்படுத்தும் வகையில் 5 முக்கிய அரசாணைகளைப் பிறப்பித்தார்.

அவற்றில் முதலாவதாக கொரோனா அச்சுறுத்தல் தற்போது உயர்ந்துவ ரும்நிலையில், மக்களின் இன்னல்கள் தொடர்வதால் தமிழக மக்களின் துன்பங்களைப் போக்குவதற்கும் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில் அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.4000வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றும்பொருட்டு, முதல்தவணையாக தலா ரூ.2000 நிவாரணதொகை வழங்கும் ஆணையினையும் இரண்டாவதாக ஆவின்பால் விலையைலிட்டர் ஒன்றுக்குரூ.3 வீதம் 16.05.2021 முதல் குறைத்து விற்பனை செய்வதற்கான அரசாணையையும் ,மூன்றாவதாக தமிழகம் முழுவதும் உள்ள அரசு போக்குவரத்துகழகக் கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பயணம்செய்யும் பணிபுரியும் மகளிர் உயர்கல்வி பயிலும் மாணவியர் உள்ளிட்ட அனைத்து மகளிரும் கட்டணமில்லாமலும் பேருந்து பயண அட்டைஇல்லாமலும் பயணம் செய்வதற்கான ஆணையினையும் நான்காவதாக “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” என்ற திட்டத்தை செயல்படுத்த ஒரு புதிய துறையை உருவாக்கி அதற்கு இந்திய ஆட்சி பணிநிலை அலுவலர் ஒருவரை நியமிக்கும் அரசாணையினையும் ஐந்தாவதாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் பலரும் அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் பொதுமக்களின்நலன் கருதி அவர்களின் இன்னலை குறைக்கும் வகையில் சிகிச்சைக்கான மருத்துவமனை கட்டணத்தை தமிழக அரசே காப்பீட்டு திட்டத்தின்கீழ் ஏற்க முதல்வர் ஆணையிட்டுள்ளார்.

முதல்வர் 08.05.2021 அன்று அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு முதல் தவணையாக தலாரூ.2000 கொரோனா பாதிப்பு நிவாரணஉதவிதொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

அதனைதொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் 2,16,086 அரிசிபெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு முதல்தவணையாக தலாரூ.2000 வீதம் ரூ .43,21,72,000 கொரோனாபாதிப்புநிவாரண உதவித் தொகை வழங்கப்பட்டது.

முதல்வர் ஆணைக்கிணங்க நீலகிரிமாவட்டத்தில் 2,16,086 அரிசிகுடும்ப அட்டைதாரர்களுக்கு இரண்டாம் தவணையாக தலா ரூ.2000கொரோனா பாதிப்பு நிவாரண உதவித்தொகை ரூ.43,21,72,000 மற்றும் ரூ.8.73 கோடி மதிப்பீட்டில் சர்க்கரை 500 கிராம் கோதுமை மாவு 1 கிலோ உப்பு 1 கிலோரவை 1 கிலோ உளுந்தம் பருப்பு 500 கிராம்புளி 250 கிராம் கடலை பருப்பு 250 கிராம் டீதூள்200 கிராம் கடுகு 100 கிராம் சீரகம் 100 கிராம் மஞ்சள்தூள் 100 கிராம் மிளகாய்தூள் 100 கிராம் குளியல் சோப்பு (125 கிராம்) 1 எண்ணம் துணி சோப்பு (250 கிராம்) எண்ணம்ஆகிய 14 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பும் வழங்கப்பட்டது.

முதல்வருக்கு நன்றி
கொரோனா உதவிதொகை பெற்றுக்கொண்ட பயனாளி கூறுகையில், என் பெயர் அன்னபூரணி.

எனக்கு வயது 62. நான் உதகை நொண்டிமேடு பகுதியில் வசித்து வருகிறேன். என் கணவர் இறந்து விட்டார். எனக்கு ஒரு மகன் இருக்கிறான். நான் கூலிவேலை செய்து வந்தேன்.

தற்போது கொரோனா தொற்றுநோய் பாதிப்பினால் முழுஊரடங்கு அறிவித்த காரணத்தினால் எங்களால் கூலிவேலைக்கு செல்ல இயலவில்லை.

எனவே நானும் எனதுமகனும் வாழ்வாதாரம் இன்றி பாதிப்பிற்குள்ளாகி இருந்தோம்.

தமிழக மக்களின்துன்பத்தினை போக்கிடும் வகையில் முதல்வர் கொரோனாநிவாரணநிதி இரண்டு தவணையாகதலா ரூ.2000 வீதம் வழங்க ப்படும் என அறிவித்திருந்தார்.

அதன்மூலம் எனக்கு முதல் தவணையாக ரூ.2000மும், இரண்டாம் தவணையாக ரூ.2000 மற்றும் 14 வகைமளிகை பொருட்களும் கிடைத்தது.

கொரோனா தொற்று நோயிலிருந்து மக்களை காப்பதற்காக பொது முடக்கத்தை அறிவித்த போதும் ஏழைஎளியமக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்காதவகையில் நிவாரண உதவிகளை வழங்கிய முதல்வருக்கு மனமார்ந்தநன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

துன்பத்தை போக்க உதவியது
கொரோனா உதவி தொகை பெற்றுக் கொண்ட பயனாளி கூறுகையில், என் பெயர் தீகம்மா. எனக்கு 60 வயதாகிறது.

நான்புதுமந்து பகுதியில் வசித்து வருகிறேன். எனது கணவர் இறந்து விட்டார். எனதுஇரண்டு மகன்களுக்கும் திருமணமாகி விட்டது.

நான் தனியாகதான் வசித்துவருகிறேன். ஏதேனும் தோட்டவேலைகிடைத்தால் சென்று அதன்மூலம் வருமானம் ஈட்டிவந்தேன்.

தற்போது கொரோனா தொற்றுநோய்பாதிப்பினால் முழு ஊரடங்கு அறிவித்த காரணத்தினால் தோட்டவேலை அதிக அளவில் கிடைக்காத காரணத்தினால் வாழ்வாதாரம் இன்றி பாதிப்பிற்குள்ளாகி இருந்தேன்.

ஆனால் தமிழகமக்களின் துன்பத்தினை போக்கிடும் வகையில் முதல்வர்கொரோனா நிவாரண நிதி இரண்டு தவணையாக தலாரூ.2000 வீதம் வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.

அதன்மூலம் எனக்கு முதல் தவணையாக ரூ.2000மும், இரண்டாம் தவணையாக ரூ.2000 மற்றும் 14 வகை மளிகைபொருட்களும்கிடைத்தன.

இதன்மூலம் கொரோனா தொற்றுநோயிலிருந்து மக்களை காப்பதற்காக பொதுமுடக்கத்தை அறிவித்தபோதும் எங்களை போன்றவர்களுக்கு இந்தபேரிடர் காலத்தில் நிவாரண உதவி வழங்கிய முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தகொரோனா பெருந்தொற்று காலத்திலும் பொதுமக்களின் பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கக்கூடாது என்பதற்காக இதுபோன்ற பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி மக்களை பாதுகாத்துவரும் முதல்வருக்கு நீலகிரி மாவட்ட மக்கள் நெஞ்சம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.

தொகுப்பு
நி.சையத் முகம்மத்
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்
ஓ.ர.மனோஜ் குமார்
உதவி மக்கள் தொடர்பு அலுவலர்(செய்தி)
நீலகிரி மாவட்டம்.

படிக்க வேண்டும்

spot_img