fbpx
Homeபிற செய்திகள்வேலைவாய்ப்பு உத்தரவாதத்துடன் மாணவர்களுக்கு தொழில்முறை கல்வி பயிற்சி டிப்ளமோ படிப்பு

வேலைவாய்ப்பு உத்தரவாதத்துடன் மாணவர்களுக்கு தொழில்முறை கல்வி பயிற்சி டிப்ளமோ படிப்பு

இந்திய விருந்தோம்பல் துறையில் திறன் மேம்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு இந்திய தொழில்துறை கூட்டமைப்பும், ஐடிசி ஹோட்டல்ஸ் நிறுவனமும், 18 மாதகால அளவுடன் தொழில்முறை கல்வி மற்றும் பயிற்சிக் கான டிப்ளமோ படிப்பை வழங்க சுவிட்சர்லாந்தின் இஎச்எல் (EHL) கல்விக் குழுமத்தோடு ஒத்துழைப்பை மேற்கொண்டிருக்கின்றன.

ஐடிசி கிராண்டு சோழா (சென்னை), ஐடிசி மௌரியா (புதுடெல்லி), ஐடிசி சோனார் அண்ட் ராயல் பெங்கால் (கொல்கத்தா) மற்றும் ஐடிசி மராத்தா (மும்பை) ஆகிய நான்கு ஐடிசி லக்சரி ஹோட்டல் அமைவிடங்களில் இத்திட் டம் மேற்கொள்ளப்படும்.

உலகளவில் முக்கிய விருந் தோம்பல் நிறுவனங்களால் அங்கீகரிக்கப்பட் டிருக்கிற ‘VET by EHL’-ஐ வெற்றிகரமாக பூர்த்தி செய்யும் மாணவர்களுக்கு100% வேலைவாய்ப்பு உத்தரவாதத்தையும் சிஐஐ வழங்கியிருக்கிறது.

தெற்காசியா, மத்தியக் கிழக்கு மற்றும் மியான்மருக்கான EHL-ன் இணை இயக்குனர் மற்றும் பிராந்திய தலைவர் பிரவீன்ராய் கூறியதாவது: சென்னை மாநகரம், உலகெங்கிலுமிருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கு மிகப்பெரிய சாத்தியத் திறனைக் கொண்டிருக்கிறது.

விருந்தோம்பல் துறையில் வேலை வாய்ப்பையும் வழங்கக் கூடியதாக இருப்ப தால் திறனுள்ள பணியாளர்களின் தேவை மற்றும் வழங்கலுக்கு இடையிலான இடைவெளியை நிரப்புவதை அவசியமானதாக கருதினோம்.

தொழில்முறை பயிற்சியை வழங்கி திறன் மிக்கப் பணியாளர்களை உருவாக்குவதன் அவசியமே இத்திட்டத்திற்கு வழிவகுத்திருக்கிறது என்றார்.
சிஐஐ-ன் செயல் இயக்குனர் சௌகத்தாராய் சௌத்ரி பேசுகையில், “உலகளவில் அங்கீகரிக்கப்படுகிற, திறமை வாய்ந்த பணியாளர்களுக்கு இந்திய விருந்தோம்பல் தொழில்துறையில் காணப்படும் தேவையைப் பூர்த்தி செய்வதே சிஐஐ-ன் நோக்கமாகும்.

வரும் ஆண்டுகளில் இச்செயல் திட்டத்தில் இன்னும் அதிக ஹோட்டல்களை இணைக்க விருப்பதால் பயிற்சியும், திறனும் கொண்ட பணியாளர்களின் எண்ணிக்கை உயரும்.

3 ஆண்டுகள் காலஅளவில் தேசிய அளவில் ஏறக்குறைய10,000 மாணவர்கள் இப்பயிற்சி திட்டத்தில் இணைவார்கள் என்று எதிர்ப்பார்க்கிறோம் என்றார்.

ஐடிசி லிமிடெட்-ன் ஹோட்டல் டிவிஷனின் திறன் மேலாண்மையின் துணைத் தலைவர் நிலேஷ்மித்ரா கூறியதாவது: திறன் தொகுப்பையும், கற்றல்களையும் கல்வி அலகோடு ஐடிசி ஹோட்டல்கள் தொடர்ந்து ஒருங்கிணைத்து வருகின்றன.

நேரடி பயிற்சியின் வழியாக திறனை இன்னும் கூர்மையாக்கிக் கொள்ள சிறந்த வாய்ப்பை மாணவர்களுக்கு வழங்குகிறது, என்றார்.

படிக்க வேண்டும்

spot_img