fbpx
Homeபிற செய்திகள்கோவை கவுண்டம்பாளையம் மேம்பாலத்தில் வாகனங்கள் சோதனை ஓட்டம்

கோவை கவுண்டம்பாளையம் மேம்பாலத்தில் வாகனங்கள் சோதனை ஓட்டம்

கோவை & மேட்டுப் பாளையம் சாலையில் மேம்பாலம் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில் பாலத்தில் சோதனை ஓட்டமாக வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கோவை – மேட்டுப் பாளையம் சாலையில், கவுண்டம்பாளையம் சந்திப்பில் ஹவுசிங் யூனிட் முதல் ராமசாமி திருமண மண்டபம் வரை 1.20 கிலோ மீட்டர் நீளம், 17.20 மீட்டர் அகலத்தில் ரூ.66 கோடி மதிப்பில் மேம்பாலம் அமைக்கும் பணி 2020ம் ஆண்டு மார்ச் மாதம் துவங்கப்பட்டது.

இந்தப் பாலப் பணிகளால் மேட்டுப்பாளையம் சாலை யில் போக்குவரத்து நெரிசல் தவிர்க்க முடிய £மல் இருந்ததால், காந்திபுரத்தில் இருந்து கவுண்டம்பாளையம், துடியலூர் வழியாக மேட்டுப்பாளையம் சென்று வந்த வாகனங்கள் காந்திபுரம், டி.வி.எஸ், அரசு தொழில்நுட்பக் கல்லூரி, வேலாண்டி பாளையம், கணுவாய் வழியாக துடியலூர் சென்று அங்கிருந்து மேட் டுப்பாளையம் செல்லும் வகையில் மாற்றப்பட்டது.

இந்நிலையில், பாலப் பணி நிறைவடைந்த நிலையில், கடந்த வெள் ளிக்கிழமை முதல் பாலத் தில் வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு பேருந்துகள், கார்கள், லாரிகள் மற்றும் அனைத்து இருசக்கர வாகனங்களும் சென்று வர அனுமதிக் கப்பட்டுள்ளன.

இதுகுறித்து, நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: மேம்பாலத்தில் மேற் புறத்தில் அனைத்துப் பணிகளும் முடிவுற்றன.

பாலத்தின் கீழ்ப்பகுதியில் அணுகுசாலை அமைத்தல், குடிநீர் வடிகால் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

பாலத்தில் சோதனை ஓட்டம் மேற்கொள்ளும் வகை யில் தற்காலிகமாக வாக னங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பணிகள் முழுமையாக நிறைவடைந்து, திறப்பு விழாவுக்கு பிறகு தான் நிரந்தரமாக மேம்ப £லத்தில் வாகனப் போக்கு வரத்துக்கு அனுமதி அளிக்கப்படும் என்றார்.

படிக்க வேண்டும்

spot_img