fbpx
Homeபிற செய்திகள்நாளை வாக்கு எண்ணிக்கை - அமைச்சர் செந்தில்பாலாஜி புகார்: வன்முறையில் ஈடுபட அதிமுக திட்டம்

நாளை வாக்கு எண்ணிக்கை – அமைச்சர் செந்தில்பாலாஜி புகார்: வன்முறையில் ஈடுபட அதிமுக திட்டம்

நாளை நடைபெறும் வாக்கு எண்ணிக்கையின் போது வன்முறையில் ஈடுபட அதிமுக திட் டமிட்டிருப்பதாக மின் சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி புகார் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட் பாளர்கள் மற்றும் முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று காளப்பட்டி சுகுணா திருமண மண்டபத்தில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் இன்று நடைபெற்றது.

கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது:- நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. கோவையில் உள்ளாட்சி தேர்தல் வாக்குபதிவின்போது அதிமுகவினர் அத்துமீறி நடந்து கொண்டனர்.

விதிகளை மீறி அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் வாக்கு சாவடிக்குள் சென்றனர். அவர்கள் வாக்கு சாவடிகளுக்குள் எப்படி சென்றார்கள்? அவர்களுக்கு அனுமதி கொடுத்தது யார் என்று தெரியவில்லை.

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குள் சென்றது குறித்து திமுக சார்பில் அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நாளை நடைபெறும் வாக்கு எண்ணிக்கையின் போது வன்முறையில் ஈடுபட அதிமுக திட்ட மிட்டுள்ளது.

ஒரு வார்டுக்கு 100 பேர் வீதம் வாக்கு எண்ணிக்கை மையங்களில் குவிக்க அதிமுகவினர் ஏற்பாடு செய்துள்ளனர். கோவையில் நடந்த அதிமுக ரகசிய கூட்டத்தில் வன்முறையில் ஈடுபட திட்டம் வகுக்கப்பட்டது என்று செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

வாக்கு எண் ணிக்கையை சீர்கு லைக்கும் அதிமுக முயற்சிகளை எதிர்கொள்வதற்கு திமுக முகவர்களுக்கு அறிவு ரைகள் வழங்கப்பட்டுள்ளன.
அதிமுகவினர் வன்முறையில் இறங்கினாலும் திமுகவினர் அமைதி காக்க வேண்டும்.

கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளையும் திமுக கூட்டணியே கைப்பற்றும் என்பதில் சந்தேகம் இல்லை.

வாக்கு எண்ணிக்கை சுமூகமாக நடைபெற திமுகவினர் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.

இதில், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழ னிச்சாமி, திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் நா.கார்த்திக், பையா ஆர்.கிருஷ்ணன், மருதமலை சேனாதிபதி, டாக்டர் வரதராஜன், முன்னாள் எம்பி நாகராஜ், காங்கிரஸ் செயல்தலைவர் மயூரா ஜெயக்குமார், மதிமுக ஆர்.ஆர்.மோகன்குமார், சிபிஎம் இராமமூர்த்தி, சிபிஐ சுந்தரம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தனபால், மனிதநேய மக்கள் கட்சி ஜெம் பாபு, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img