fbpx
Homeபிற செய்திகள்புதிய விவோ ஒய்15 எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் விலையில் சலுகையும் அறிவிப்பு

புதிய விவோ ஒய்15 எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் விலையில் சலுகையும் அறிவிப்பு

உலகளாவிய சிறந்த ஸ்மார்ட்போன் பிராண்டாக திகழும் விவோ நிறுவனத்தின் ஒய் மாடல் குடும்பத்திலிருந்து, விவோ ஒய்15எஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பிரமிக்கச் செய்யும் வடிவமைப்புடன் வெளிவந்திருக்கும் இந்த ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரியும் பின்புறம் 13 எம்பி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திலான இரட்டை கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது.

இது மிஸ்டிக் ப்ளூ மற்றும் வேவ் கிரீன் ஆகிய இருவித வண்ணங்களில் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் ஸ்டோர்களில் கடந்த 18-ம் தேதி முதல் விற்பனைக்கு வந்துள்ளது.

இதன் உண்மையான விலை 13,990 ரூபாய் ஆகும். அறிமுக சலுகையாக 10,990 ரூபாய்க்கு இந்த ஸ்மார்ட்போன் விற்பனை செய்யப்படுகிறது.

இது 16.55செ.மீ.(6.51 இன்ச்) ஹாலோ புல்வியூ டிஸ்பிளே மற்றும் எச்டி ரிசலூஷனுடன் பிரகாசமான வண்ணங்களுடன் தெளிவான விவரங்களுடன் பயனர்களுக்கு சிறந்த அனுப வத்தை வழங்குகிறது.

தடையற்ற செயல்திறனை வழங்குவதற்காக இதில் மீடியாடெக் ஹீலியோ பி35 புராசசர் பொருத்தப்பட்டுள்ளது.

பயனர்களுக்கு ஈடில்லாத செயல்பாடுகளை வழங்கும். இந்த புதிய ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கார்டுடன் வருகிறது.

புதிய ஒய்15எஸ் ஸ்மார்ட்போன் குறித்து விவோ இந்தியா நிறுவனத்தின் பிராண்ட் ஆலோசனை இயக்குனர் யோகேந்திர ஸ்ரீராமுலா கூறுகையில், அதிவேக அனுபவங்கள் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களை விரும்பும் இளம் தலைமுறையினருக்கு ஏற்ற வகையில் விவோவின் ஒய் மாடல் போன்கள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.

அதன் சிறந்த மற்றும் வித்தியாசமான அனுப வங்களை வழங்கும் விதமாக தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எங்களின் செயல்பாடுகளை நாங்கள் மேலும் வலுப் படுத்த உத்தேசித்துள்ளோம் என்றார்.

179 கிராம் எடையுடன் 8.28எம்எம் தடிமன் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் கைகளில் எளிதாக வைத்துக்கொள்ளும் வகையில் வடிவைமக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனை கைரேகை சென்சார் மூலம் திறக்கலாம்.

கூடுதலாக இதில் பேஸ் வேக் வசதி மற்றும் கண் சிமிட்டுவதன் மூலமும் திறக்கும் வசதியும் உள்ளது.

படிக்க வேண்டும்

spot_img