fbpx
Homeபிற செய்திகள்கையில் டன்ஸோ இருந்தால் சென்னை வாசிகளுக்கு வீட்டுக்கே வரும் மளிகைப் பொருட்கள்

கையில் டன்ஸோ இருந்தால் சென்னை வாசிகளுக்கு வீட்டுக்கே வரும் மளிகைப் பொருட்கள்

இந்தியாவின் முன்னணி ‘துரித விற்பனை கன்வீனியன்ஸ் ஸ்டோர்ஸ்’ நிறுவனமான டன்ஸோ, தனது மளிகைப் பொருட்கள் டெலிவரி செய்யும் ‘டன்ஸோ டெய்லி’ சேவையை சென்னையில் துவங்கியுள்ளது.

தினசரி தேவைகளான பழங்கள், காய்கறிகள், பால் பொருட்கள், மாமிசம், நொறுக்குத்தீனிகள், வீட்டு உபயோகப் பொருட்கள், சுகாதார தயாரிப்புகள் மற்றும் பல பொருட்களை தேர்ந்தெடுக்கப்பட்ட உயர் ரகத்தில், வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக ‘டன் ஸோ டெய்லி’ வழங்குகிறது.

அதிநவீன தொழில் நுட்ப நெட்வொர்க் முறையில் இயங்கும் சிறிய கிடங்குகளின் மூலம் ஆர்டர்களை 2 நிமிடத்திற்குள் செயல்ப டுத்தி, ‘டன்ஸோ டெய்லி’ மளிகை மற்றும் அத்தியாவசியப் பொருட்களை 15-20 நிமிடத்திற்குள் உடனடியாக டெலிவரி செய்கிறது.

2021-ம் ஆண்டு பெங்களூருவில் துவங்கப்பட்டதிலிருந்து, ‘டன் ஸோ டெய்லி’யின் மா தாந்திர ஆர்டர்களின் எண்ணிக்கை 1 மில்லியனாக வளர்ந்துள்ளது.

சென்னை மற்றும் புனேவில் இந்த சேவை விரி வாக்கப்படவிருப்பதை அடுத்து, பிப்ரவரி 2022- ற்குள் இந்த எண்ணிக்கை இரட்டிப்பாகும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு மற்றும் iOS-இல் டன்ஸோ செயலியின் மூலம் இந்த சே¬ வயை பெறலாம். சென்னையில், டன்ஸோ டெய்லி 15-க்கும் அதிகமான சிறிய கிடங்குகளுடன் தனது செயல்பாடுகளை மேற் கொள்வதால், நகரை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளுக்கும் தினசரி தேவைகளை உடனடியாக டெலிவரி செய்ய முடியும்.

டன்ஸோ நிறுவனத்தின், தலைமை நிர்வாக அதிகாரியும், இணை நிறுவனருமான கபீர் பிஸ்வாஸ் கூறியதா வது: பரபரப்பாக இயங் கும் சென்னைவாசிக ளின் தினசரி, வாராந்திர தேவைகளை பூர்த்தி செய்யும் விருப்பமான தளமாக ‘டன்ஸோ டெய்லி’ இருக்க வேண்டும் என்பதே எங்கள் இலக்கு.

சென்னையில், ‘டன்ஸோ டெய்லி’யை துவங்குவதற்கு உள்ளூர் விநியோகத் தொடர் பார்ட்னர்களிடமிருந்து எங்களுக்கு நல்ல ஆதரவு கிடைத்தது.

டெலிவரி பார்ட்னர்கள், கிடங்குகளை இயக்குபவர்கள் மற்றும் விநியோகத் தொடரில் உள்ள பார்ட்னர்கள் என நகரில் உள்ள அனைவருக்கும் ‘டன்ஸோ டெய்லி’ ஒரு சிறந்த சில்லறை விற்பனை தொழில் அமைப்பை ஏற்படுத்தி, அதன் மூலம் 2022, ஏப்ரல் மாதத்திற்குள் 1 மில்லியன் மாதாந்திர ஆர்டர்களை நிறைவேற்ற வேண்டும் என்பதே எங்கள் இலக்காகும், என்றார்.

படிக்க வேண்டும்

spot_img