fbpx
Homeபிற செய்திகள்போர் மூண்டது - ஏவுகணைகளை வீசி ரஷ்யா உக்கிர தாக்குதல்: உக்ரைனின் விமானப்படை தளங்கள் அழிப்பு-...

போர் மூண்டது – ஏவுகணைகளை வீசி ரஷ்யா உக்கிர தாக்குதல்: உக்ரைனின் விமானப்படை தளங்கள் அழிப்பு- 2 நகரங்களை கைப்பற்றி விட்டதாக அறிவிப்பு

கிழக்கு உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலைத் தொடங்கியுள்ள நிலை யில், உக்ரைனின் விமானப் படை தளங்களை அழித்துவிட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீது தாக்கு தலைத் தொடங்கிய ரஷ்யாவுக்கு உலக நாடுகள், குறிப்பாக மேற் கத்தியநாடுகள் தங்களின் கண்டனங்களை பதிவு செய்துவரும் சூழலில், ”உக்ரைனின் ராணுவ கட்டமைப்புகளை மட்டுமே குறிவைத்து பிரத்யேக ஆயுதங்கள் மூலம் திட்டமிட்டு தாக் குதல் நடத்துகிறோம்.

பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளைத் தாக்கவில்லை” என்று ரஷ்யா தெரிவித்தது.
இந்நிலையில், கடைசியாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ”உக்ரைன் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த விமானப்படை தளங் களை முற்றிலுமாக அழித்துவிட்டோம்.

அதன் வான்வழித் தாக் குதல் கட்டமைப்புகள் அழிக்கப் பட்டுவிட்டன” என்று தெ ரிவித்துள்ளது. முன்னதாக, ரஷ்யாவின் 5 விமானங்களை வீழ்த்திய தாக உக்ரைன் அறிவித்தது.

உக்ரைன் உள்துறை அமைச்சர் ஆன்டன் கெ ராஸ்சென்கோ அந்த அறிவிப்பை வெளியிட்ட சில நிமிடங்களிலேயே ”உக்ரைன் விமானப்படை கட்டமைப்புகளை வீழ்த் திவிட்டோம்” என்ற அறி விப்பை ரஷ்யா வெளியிட்டுள்ளது.

இதற்கிடையில், 100க்கும் மேற்பட்ட தங்களின் ராணுவ வீரர்கள் உயிரிழந்துவிட்டதாக உக்ரைன் தரப்பு தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே ரஷ்யா தனது தாக்குதல் திட்டம் பற்றி மேலோட்டமாகக் கூறியது. அதில், ”ராணுவ கட்டமைப்புகள், ஏர்பேஸ், துறைமுகங்கள்தான் எங்களின் இலக்கு” என்று கூறியிருந்தது.

தற்போது துறைமுகங்களைக் குறி வைத்து ரஷ்யா தாக்குதலை ஆரம்பித்துள்ளதாக தகவல் கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையில் உக்ரைனின் கிழக்கில் உள்ள லுகான்ஸ்க் பகு தியில் 2 நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததாக ரஷ்ய ஆதரவு உக்ரைன் கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.

உக்ரைனில் ரஷ்யா கொத்துக்குண்டுகளை பொழிந்து வருவதை பயன் படுத்தி 2 நகரங்களை கிளர்ச்சியாளர்கள் கைப் பற்றியுள்ளனர். உக்ரைனை மூன்று திசைகளில் இருந்து சுற்றிவளைத்து ரஷ்ய ராணுவம் தாக்கி வருகிறது.

கருங்கடல் பகுதியில் இருந்து போர்க்கப்பல்கள் மூலமாக உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது ஏவுகணைகளை வீசி ரஷ்யா தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. பெலாரஸ் நாட்டின் எல்லை பகுதிகளில் இருந்தும் அதிநவீன ஏவுகணைகளை வீசி உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது.

உக்ரைனின் கிழக்கு பகுதியில் இருந்து விமானப்படை மூலம் குண்டுகள் பொழிந்து வரு கின்றன. ரஷ்யாவின் நட்பு நாடான பெலாரஸில் இருந்து உக்ரைனின் வடக்கு நகரங்கள் மீது ரஷ்ய விமானப்படை குண்டு மழை பொழிகிறது.

தாக்குதலுக்குள்ளான உக்ரைனில் 100க்கும் மேற் பட்ட தமிழக மருத்துவ மாணவர்கள் சிக்கி தவித்து வருகின்றனர். உக்ரைன் தலைநகர் கீவில் மட்டும் கொடைக்கானலை சேர்ந்த மாணவி உள்பட 100க்கும் மேற்பட்டோர் சிக்கியுள் ளனர்.

ரஷ்யாவின் தாக்குதலில் நூற்றுக்கணக்கான தங் கள் நாட்டு ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக உக்ரைன் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.

இதனிடையே உக்ரைன் நாட்டின் தலைநகரான கீவ் நகருக்கு இந்தியர்கள் செல்ல வேண்டாம் என்று மத்திய வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.

படிக்க வேண்டும்

spot_img