fbpx
Homeபிற செய்திகள்கேபிஆர் கல்லூரியில் ஒடிசிய நாட்டிய விழா

கேபிஆர் கல்லூரியில் ஒடிசிய நாட்டிய விழா

கோவை கே.பி.ஆர். கல்வி நிறுவ னங்கள் மற்றும் குழும நிறுவனங் களின் சார்பாக இயங்கிவரும் குறிஞ்சி தமிழ் சங்கத்தின் ஒடிசிய நாட்டிய விழா, நேற்று (பிப்.28) கல்லூரி கலையரங்கில் நடந்தது.

கே.பி.ஆர். குழும நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் ராமசாமி வழிகாட்டுதலின் பேரில், விழாவை முதல்வர் கே.பி.ஆர். பொறியியல் கல்லூரி முதல்வர் முனைவர் மு.அகிலா தலைமை தாங்கி நடத்தினார்.

விழாவில் கே.பி.ஆர்.கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரி முதல்வர் முனைவர் பாலுசாமி வாழ்த்துரை வழங்கினார்.

கல்கத்தாவின் ஒடிசி நடனத்தின் குரு சதாப்தி மல்லிக் குழுவினர் நடனம் புரிந்தனர். தேபஸ்மிதாகர், இந்திராணி மிஸ்ரா, ஸ்ரீ டன் மொய் சமந்தர், ஸ்ரீகுமாரி இந்துராணி ஆகியோர் மிக அற்புதமான அளவில் ஒடிசி நடனத்தை நிகழ்த்தினர்.

பரதம், மணிப்புரி, கதக்களி, தாண்டியா போன்ற பாரம்பரிய நடன வகைகளில் ஒடிசி ஒரு புகழ்பெற்ற நடன வகை. இந்த ஒடிசி நடனம் அங்க அசைவுகளும் மற்றும் கைகளின் அபிநயங்களும், அவருடைய ஆடை அலங்காரத்திலும் மிகவும் புகழ் பெற்றது.

தமிழகத்தில் கோவை பகுதியில் இந்த நடன வகைகளை முதன்முதலாக அரங் கேற்றிய பெருமை கே.பி.ஆர். குழும நிறுவனங்களையே சாரும்.

இந்த ஒடிசி நடன குழுவினர் சிதம்பரம் நாட்டியாஞ்சலிக்கும் தேர்வாகி உள்ளார்கள் என்பது ஒரு குறிப்பிடத்தக்கது.

படிக்க வேண்டும்

spot_img