fbpx
Homeபிற செய்திகள்கோவையில் இருநாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் ஓரிரு நாளில் துவக்கம் - லியோனி பட்டிமன்றம் துவக்கிவைத்து...

கோவையில் இருநாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் ஓரிரு நாளில் துவக்கம் – லியோனி பட்டிமன்றம் துவக்கிவைத்து அமைச்சர் செந்தில்பாலாஜி பேச்சு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டா லின் பிறந்தநாளை ஒட்டி, திண்டுக்கல் ஐ.லியோனி நடுவராக பங்கேற்ற சிறப்பு பட்டிமன்றம் – ஒருங்கிணைந்த கோவை மாவட்டம் சார்பில் நடைபெற்றது. மின்சாரத்துறை அமைச்சர் செந் தில் பாலாஜி சிறப்புரையாற்றி துவக்கி வைத்தார்.

தமிழக முதல்வரின் பிறந்த நாளையொட்டி, ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக சார்பில், கோவை தெப்பக்குளம் மைதானத்தில் சிறப்பு பட்டி மன்றம் நடைபெற்றது.

கழக கொள்கை பரப்பு செயலாளரும், தமிழ்நாடு அரசு பாடநூல் கழக தலைவருமான கலைமாமணி திண் டுக்கல் ஐ.லியோனி நடுவராக பங்கேற்றார்.

இந்த சிறப்பு பட்டிமன்றத்தை தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையேற்று பேசியதாவது:

இந்தியாவிலேயே, தலைவர்க ளுக்கு எல்லாம் தலைவராக உள்ள முதல்வரின் பிறந்தநாளில் கோவை அரசு மருத்துவமனையில் தளபதியின் பிறந்தநாளில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது.

பிறந்த நாளையொட்டி, 6 ம்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாநகராட்சி, நகராட்சி, பேரூ ராட்சிகளில் பெண்கள், குழந்தைக ளுக்கான போட்டிகள் நடைபெற உள்ளது.

விளையாட்டு போட்டி களும், அடுத்த ஞாயிற்றுக்கிழமை விளையாட்டு போட்டிகளும், வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்படும் இரு நாள்களுக்கு ஒரு முறை குடிநீர் என்ற திட்டப் பணிகள் நடைபெற்று சில நாட் களில் துவங்கப்பட உள்ளது.

கோவை மக்களுக்கு தேவை யானவற்றை வழங்க முதல்வர் தயாராக உள்ளார். இன்னும் ஆயிரம் ஆயிரம் கோடிகளை வழங்குவார். அதன்மூலம் கோவை மக்களின் அடிப்படை பிரச்சினைகள் தீர்க்கப்படும், கட்ட மைப்பு வசதிகள் செய்து தரப்படும் என கூறினார்.

இதைத்தொடர்ந்து, “அண்ணா வின் கனவே” என்னும் தலைப்பில் நெல்லை ஜெயந்தாவும், மதுரை சங்கரும் பேசினர், மேலும், “கலைஞரின் துணிவே” என்னும் தலைப்பில் கோவை தனபால், நாகநந்தினி ஆகியோர் பேசினர்.

இதில், ஐ.லியோனி பேசியதா வது:- இந்தியாவிலேயே எந்த முதல்வருக்கும் எண்ணாத திட்டம், நம்ம முதல்வருக்கு வந்துள்ளது பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், என கூறிய வர், ஆன்லைன் பாடத்தால் மாணவர்களின் பாடம் பயில்வது கெட்டுபோய்விடும் என்பதால், எதிர்காலத்தை கருத்தில் எண்ணி இல்லம் தேடி கல்வி என்ற சாதனை மிகுந்த திட்டத்தை கொண்டு வந்தார் தமிழக முதல்வர்.

தன்னை எதிர்த்து வாக்களித்தவர்களுக்கும், நலத்திட்டங்களை வழங்கியர் தளபதி, திமுக ஆட்சிக்கு வந்தவு டன் கோவில்கள் மூடப்படும் என 1967 ல் பொய் பிரச்சாரத்தை மேற்கொண்டனர். அன்று மகாம கத்தில் பல லட்சம் பேருக்கு உணவு களை வழங்கியவர் கலைஞர்.

இன்று ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் நிலங்கள் மீட்கப்பட்டு வருகின்றது, கோவில்களில் தமிழில் அர்ச்சனை நடைபெறுகின்றது.

தமிழ் கடவுளுக்கு தமிழ் தெரியாது என சமஸ்கிருதத்தில் அர்ச்சனை செய்து நம்மை ஏமாற்றிய சக்திகளை முறியடித்து தமிழில் அர்ச்சனையை கொண்டு வந்தவர் தலைவர், அதிமுக ஆட்சியில் சிலை திருட்டுகள் நடைபெற்றது. இப்போது திமுக ஆட்சியில் கோவில்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

இராணுவ அதிகாரி இறந்து விட்டார் என தகவல் கிடைத்தவுடன் வந்து தேச பற்றை பறைச £ற்றியவர் முதல்வர். இந்தியாவே தமிழக முதல்வர் தளபதியை எதிர்பார்த்து வருகின்றது.

மதவாத சக்திகளை ஒடுக்க இந்தியாவின் அரசியலை தீர்மானிக்கும் இடத்தில் தமிழக முதல்வர் தளபதி உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த சிறப்பு பட்டிமன்றத்திற்கு , மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா.கார்த்திக் Ex mla,, வரவேற்புரையாற்றினார்.

புறநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி, தெற்கு மாவட்ட பொறுப்பாளர் டாக்டர்.வரதரா ஜன், எம்பி.சண்முகசுந்தரம், முன்னாள் எம்பி நாகராஜ், முன்னாள் மேயர் ராஜ்குமார், பகுதி கழக பொறுப்பாளர் மார்க்கெட் மனோகரன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img