fbpx
Homeபிற செய்திகள்கோவையின் முதல் பெண் மேயராக பதவியேற்றார் கல்பனா ஆனந்தகுமார்: 16 மாநகராட்சி மேயர்கள் போட்டியின்றி தேர்வு...

கோவையின் முதல் பெண் மேயராக பதவியேற்றார் கல்பனா ஆனந்தகுமார்: 16 மாநகராட்சி மேயர்கள் போட்டியின்றி தேர்வு – தேர்தல் நடந்த 5 மாநகராட்சியிலும் திமுக வெற்றி

தமிழகம் முழுவதும் 21 மாநகராட்சிகளில் மேயர் பதவிகளுக்கு மறை முக தேர்தல் இன்று நடை பெற்று வருகிறது. 20 மாநகராட்சிகளில் திமுக வேட்பாளர்களும் கும்ப கோணத்தில் காங்கிரஸ் வேட்பாளரும் வெற்றி பெற்றுள்ளனர்.

சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட 16 மாநகராட்சிகளில் மேயர் கள் போட்டியின்றி தேர்வாகி உள்ளனர். நாகர்கோவில், ஓசூர், தஞ்சை, காஞ்சிபுரம், கடலூரில் திமுகவின் அதிகாரப்பூர்வ மேயர் வேட்பாளர்களை எதிர்த்து அதிருப்தியாளர்கள் போட்டியிட்டதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

நாகர்கோவில் மாநக ராட்சி மேயர் தேர்தலில் திமுக வேட்பாளர் மகேஷ் வெற்றி பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் மகேஷ் 28 வாக்குகளும் பாஜக வேட்பாளர் மீனாதேவ் 24 வாக்குகளும் பெற்றதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. திமுக வேட்பாளர் மகேஷை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் மீனா தேவ் தோல்வி அடைந்துள் ளார்.

ஓசூர் மாநகராட்சி மேயர் தேர்தலில் திமுக வேட்பாளர் சத்யா வெற்றி பெற்றுள்ளார். பரபரப்பாக நடந்த தேர்தலில் சத்யா 27 வாக்குகளும், அதிமுகவின் பால நாராயணன் 18 வாக்குகளும் பெற்றனர்.

கடலூர் மாநகராட்சி மேயர் தேர்தலில் திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் சுந்தரி வெற்றி பெற்றுள்ளார்.

எதிர்த்துப் போட்டியிட்ட அதிருப்தி வேட்பாளர் கீதா குணசேகரன் தோல்வி அடைந்தார். வாக்களித்த 32 கவுன்சிலர்களில் 20 வாக்குகள் பெற்று சுந்தரி வெற்றி பெற்றார்.

தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் மறைமுக தேர்தலில் திமுக வேட்பாளர் ராமநாதன் வெற்றி பெற்றுள்ளார். காஞ்சிபுரம் மேயர் தேர்தலில் திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் மகாலக்ஷ்மி வெற்றி பெற்றார்.

50 வாக்குகளில் 30 வாக்குகள் பெற்று மேயரானார் மகாலக்ஷ்மி. போட்டி வேட்பாளராக களமிறங்கிய திமுக கவுன்சிலர் சூர்யா 20 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார்.

கோவை மாநகரின் முதல் பெண் மேயராக கல்பனா ஆனந்தகுமார் தேர்வு செய்யப்பட்டார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாநகரில் திமுக 96 இடங் களிலும், அதிமுக 3 இடங்களிலும், எஸ்.டி.பி.ஐ ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன.

இன்று மேயரை தேர்வு செய்ய மறைமுக தேர்தல் நடந்தது. இதில் அதிமுக உறுப்பினர்களை தவிர 97 மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு ஒரு மனதாக கல்பனா ஆனந்தகுமாரை மேயராக தேர்வு செய்தனர்.

அதன்படி, கோவையின் முதல் பெண் மேயர் என்ற பெருமையை பெற்றுள்ளார் கல்பனா ஆனந்தகுமார். மேயராக தேர்வு செய்யப்பட்ட அவருக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி செங் கோல் கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் முதல் கையெழுத்தாக, வார்டு 26 பீளமேடு, பயணீயர் மில் சாலையில் உள்ள மாநகராட்சி மேல் நிலைப்பள்ளியில் மாணவர் களுக்கு, 16 லட்சம் மதிப் பீட்டில் கழிப்பிடம் கட்டுவதற்காக கோப்பில் கையெழுத்திட்டார்.

சென்னையில் 49 வது மேயராக பிரியா ராஜன் போட்டியின்றி தேர்வு
சென்னை மாநக ராட்சி மேயராக திமுக வேட்பாளர் பிரியா ராஜன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு திமுக வின் பிரியா மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி அறிவித்தார்.

இதையடுத்து சென்னை மாநகராட்சியின் 49வது மேயராக பிரியா ராஜன் பொறுப்பேற்றார். தொடர்ந்து சிவப்பு நிற அங்கி அணிந்து மேயர் இருக்கையில் அமர்ந்தார் பிரியா.

அமைச்சர்கள் சேகர் பாபு, மா.சுப்பிரமணியன் மற்றும் மயிலை எம்எல்ஏ த.வேலு ஆகியோர் இணைந்து பிரியா ராஜனுக்கு செங்கோல் வழங்கினர்.

படிக்க வேண்டும்

spot_img