fbpx
Homeபிற செய்திகள்பெ.நா.பாளையம் பேரூராட்சியில் திமுக வெற்றி

பெ.நா.பாளையம் பேரூராட்சியில் திமுக வெற்றி

பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சித் தலைவர் பதவி திமுகவின் கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் திமுக நகரப் பொறுப்பாளர் வெ.விஷ்வபிரகாஷ் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

இப்பேரூராட்சியில் மொத்த முள்ள 18 வார்டுகளில் 12 திமுகவும், 4 அதிமுகவும், 2 சிபிஎம் கட்சியும் கைப்பற்றியிருந்தனர். கடந்த புதன்கிழமை அனைத்து கவுன்சிலர்களும் தவியேற்றிருந்தனர்.

நேற்று நடந்த தலை வர் தேர்தலில் திமுக கவுன் சிலர்களின் ஆதரவுடன் திமுக நகரப் பொறுப்பாளர் வெ.விஷ்வபிரகாஷ் தலைவராக பொறுப்பேற்கவிருந்தார். இந்நி லையில் யாரும் எதிர்பாராத விதமாக திமுக தலைமையானது இப் பேரூராட்சித் தலைவர் பதவியை சிபிஎம் கட்சிக்கு ஒதுக்கியது.

சிபிஎம் கட்சி யின் சார்பில் 8ஆவது வார்டியில் போட்டியிட்டு வென்ற சிவராஜ் தலைவர் பதவிக்கு அறிவிக்கப்பட்டார்.இதனால் திமுகவினர் பெருத்த ஏமாற்ற மடைந்தனர்.

இருப்பினும் 12 திமுக கவுன்சிலர்களும்,1 சிபிஎம் கவுன்சிலரும் விஷ்வபிரகாசுக்கு ஆதரவு தெரிவித்தனர். இச்சூழ்நிலையில் வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் பேரூ ராட்சி அலுவலகம் முன்பு பொதுமக்கள் திரளாகக் கூடத் தொடங்கினர்.

இதனையடுத்து போலீசார் குவிக்கப்பட்டனர்.9.30 மணியள வில் தலைவர் தேர்வுக்கான வேட்பு மனு வழங்கலாம் என தேர்தல் அதிகாரியும்,செயல் அலுவருமான ஜெசிமாபானு அறிவித்தார்.

அப்போது விஷ்வபிரகாஷ் 13 கவுன்சிலர்களுடன் வந்து தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

சிவராஜூவிற்கு முன்மொழிவதற்கு யாருமில்லாத சூழ்நிலையில் அவரும் ஒன்றியக்குழு உறுப்பினர் என்.பாலமூர்த்தி மற்றும் தனது கட்சியினருடன் தாமதமாக வந்திருந்தார்.

இந்த நிலையில் விஷ்வபிரக £ஷைத் தவிர யாரும் வேட்பு மனுவை தாக்கல் செய்யாத காரணத்தில் 13 கவுன் சிலர்களின் ஆதரவுடன் விஷ்வபிரகாஷ் தலைவராக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட தொடர்ந்து மதியம் 2.30 மணியளவில் நடந்த துணைத் தலைவர் தேர்தலில் சிபிஎம் கட்சியின் சார்பில் 1 வது வார்டில் போட்டியிட்ட உமாதேவி துணைத்தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

இதனால் பெரியநாயக்கன் பாளையம் பேரூராட்சியே பர பரப்பாக காணப்பட்டது.
இதற்கிடையில் பாலமூர்த்தி தலைமையில் பேரூராட்சி அலுவலகம் முன்பு கூடிய சிபிஎம் கட்சியினர் விஷ்வபிரகாஷ் தலைவராக தேர்வு செய்யப் பட்டதை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

பெ.நா.பாளையம் காவல்நி¬ லயத்தில் பாலமூர்த்தி அளித்த புகாரின்பேரில் போலீசார் சிலர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

படிக்க வேண்டும்

spot_img