fbpx
Homeபிற செய்திகள்‘வரும் முன் காப்போம்’ மருத்துவ முகாமை கோவை மேயர் கல்பனா துவக்கி வைத்தார்

‘வரும் முன் காப்போம்’ மருத்துவ முகாமை கோவை மேயர் கல்பனா துவக்கி வைத்தார்

கலைஞரின் “வரும் முன் காப்போம்“ மருத்துவ முகாமை காளப்பட்டியில் கோவை மாநக ராட்சி மேயர் கல்பனா ஆனந்த குமார் துவக்கி வைத்தார்.

தமிழக அரசு சார்பில் கலைஞரின் “ வரும் முன் காப்போம்“ மருத்துவ முகாமை கோவை காளப் பட்டி அரசு மேல்நி லைப்பள்ளியில், கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோ பால்சுன்கரா முன்னிலையில் கோவை மாநகராட்சி மேயர் கல்ப னா ஆனந்தகுமார் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்து கர்ப்பிணி பெண் களுக்கு 21 பொருள்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கினார்.

இதைத்தொடர்ந்து முகாமில் மேயர் கல்பனா பேசுகையில், தமிழக அரசு மருத்துவ முகா மை சிறப்பாக நடத்தி வருவதாகவும், ஏற்கனவே 2 மருத்துவ முகாம்கள் நடைபெற்ற நிலையில், அதில் 1040 பேர் பயனடைந்ததாகவும், 1359 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதா கவும் தெரிவித்தார்

மேலும், இந்த முகாமில் பொது மருத்துவம், குழந்தைகளுக்கான சிறப்பு நலம், எலும்பு முறிவு சிகிச்சைகள் மேற்கொள் ளப்பட்டு, வருகின்றது.

கோவை மாநகராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில், 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நகர்நல மையம், 63 இடங்கள் என ரூ15.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து கர்ப்பிணி பெண்களுக்கு 21 பொ ருட்கள் அடங்கிய தொகுப் புகளை மேயர் வழங்கினார்.

இந்த முகாமில், கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜ கோபால் சுன்கரா, நகர் நல அலுவலர் ஜெகதீசன், 8 வது வார்டு மாமன்ற உறுப்பினர் விஜயகுமார், 5-வது வார்டு உறுப்பினர் நவீன்குமார் 7வது வார்டு உறுப்பினர் கோவிந்தராஜ் ஆறாவது வார்டு உறுப்பினர் பொன்னுசாமி, 23வது வார்டு உறுப்பினர் மணியன் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் ரகுபதி, நேருநகர் தேவ ராஜ் உள்ளிட்ட பலர் கலந் துகொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img