fbpx
Homeபிற செய்திகள்உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கேஎம்சிஹெச்சில் காவலர்களுக்கு இலவச மருத்துவப் பரிசோதனை

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கேஎம்சிஹெச்சில் காவலர்களுக்கு இலவச மருத்துவப் பரிசோதனை

இன்று (மார்ச் 8) உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, கோவை மாவட்ட மகளிர் காவலர் களுக்கு கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை சார்பில் ரூ.7000 மதிப்புள்ள மருத்துவப் பரிசோதனைகள் இலவசமாக வழங்கப்பட்டன.

உலக மகளிர் தினத் தை முன்னிட்டு கே.எம்.சி. ஹெச். மருத்து வமனையில், கோவை மாவட்ட மகளிர் காவ லர்களுக்கு இலவச பரிசோதனை முகாம் நடைபெற்று வருகிறது.

பல ஆண்டுகளாக மார்ச் 8-ம் தேதியன்று உலக மகளிர் தினம் விமரிசையாக கொண்டா டப்படுவதும், பெண்கள் நலன் சார்ந்த நிகழ்வுகள் கே.எம்.சி. ஹெச்-ல் நடைபெறுவதும் வழக்கம்.

இந்த தருணத்தில், தற்போது கோவைமாவட்ட காவல்துறை மற்றும் கே.எம்.சி.ஹெச். மருத்துவக் கல்லூரி பொது மருத்துவமனை இணைந்து, கே.எம்.சி.ஹெச். மருத்துவக்கல்லூரி பொது மருத் துவமனையில் மகளிர் காவலர்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனை மற்றும் பரிசோதனை முகாமை ஏற்பாடு செய்துள்ளது.

முகாமின் துவக்க நாளான நேற்று (மார்ச் 7) கே.எம்.சி.ஹெச்சின் நிர் வாக இயக்குனர் டாக்டர் அருண் பழனிசாமி, மருத் துவ சேவையினை துவக்கி வைத்தார்

படிக்க வேண்டும்

spot_img