fbpx
Homeபிற செய்திகள்ரூ.982 கோடி மதிப்பு கொரோனா உரிமை கோரல்களுக்குத் தீர்வு-ஐசிஐசிஐ ப்ரூடன்ஷியல் லைப் இன்சூரன்ஸ் தகவல்

ரூ.982 கோடி மதிப்பு கொரோனா உரிமை கோரல்களுக்குத் தீர்வு-ஐசிஐசிஐ ப்ரூடன்ஷியல் லைப் இன்சூரன்ஸ் தகவல்


ஒன்பது மாத நிதியாண்டு 2022-ல் ரூ.982 கோடி மதிப்புள்ள கோவிட்-19 தொடர்பான உரிமைகோரல்களை ஐசிஐசிஐ ப்ரூடன்ஷியல் லைப் இன் சூரன்ஸ் நிறுவனம் தீர்வு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021 நிதியாண்டில் ஐசிஐசிஐ ப்ரூடன்ஷியல் லைப் இன்சூரன்ஸ் (ICICI Prudential Life Insurance)ன் உரிமைகோரல் தீர்வு விகிதம் 97.9% ஆக இருந்தது. விசாரணை செய்யப்படாத மரண உரிமைகோரல்களைத் தீர்ப்பதற்கு இந்நிறுவனம் சராசரியாக 1.4 நாட்கள் எடுத்துக் கொண்டது.

9 மாத-நிதியாண்டு 2022-ல், இந்நிறுவனம் ரூ. 982 கோடி மதிப்புள்ள கோவிட்-19 தொடர்பான கோரிக்கைகளை தீர்த்துள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு, குறிப் பாக தொற்றுநோய்களின் போது, உரிமைகோரல் தீர்வு செயல்முறையை விரைவாகவும், பாதுகாப்பாகவும், வசதி யாகவும் செய்ய, இந்த நிறுவனம்,Artificial Intelligence (AI), இயந்திர வழி கற்றல், Robotic Process Auto mation (RPA) மற்றும் Optical Character Recognition (OCR) போன்ற டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறது.

RPA மற்றும் OCR போன்ற தொழில்நுட்பங்கள் எழுத்துறுதி, உரிமைகோரல் மதிப்பீடு, பாலிசி விற்பனை செய்தல் அல்லது புதுப்பித்தல் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட சலுகைகளை வழங்குவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன.

வாடிக்கையாளர்கள், வாட்ஸ் அப், மொபைல் ஆப், இணையதளம், சாட்போட் லிகோ (Chatbot LiGo) போன்ற டிஜிட்டல் டச்-பாயிண்ட்களின் மூலம் சேவை கோரிக்கைகளைத் தொடங்கவும் முடிக்கவும், தேவையான ஆவணங்களைப் பதிவேற்றவும், பிரீமியம் செலுத்திய சான்றிதழ்களைப் பதிவி றக்கவும் பயன்படுத்தலாம்.

ஐசிஐசிஐ ப்ரூடன்ஷியல் லைப் இன்சூரன்ஸ் வாடிக்கையாளர் சேவை முதன்மை அதிகாரி ஆஷிஸ் ராவ் கூறும்போது, ‘எங்கள் அனைத்து டிஜிட்டல்மயமாக்கல் முயற்சிகளும் வாடிக்கையாளர்களை மேம்படுத்து வதையும் அவர்களுக்கு தொந்தரவற்ற அனுபவத்தை வழங்குவதையும் நோக் கமாகக் கொண்டுள்ளது’ என்றார்.

படிக்க வேண்டும்

spot_img