fbpx
Homeபிற செய்திகள்கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர் கல்வித் திட்ட முகாம்

கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர் கல்வித் திட்ட முகாம்

ஈரோடு மாவட்டம், நம்பியூர் வட்டத்திற் குட்பட்ட இருகாலூர் காலனி பால் உற்பத் தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் ஈரோடு மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் மூலம், சங்க வளாகத்தில் உறுப் பினர் கல்வித்திட்ட முகாம் நடந்தது.

முகாமில் துணைப்பதிவாளர் (பால் வளம்) ஜெ.ராஜராஜன் தலைமை வகித்து பேசியதாவது: இருகாலூர் காலனி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம், 2017-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி துவக்கப்பட்டு தற்சமயம் 142 உறுப்பினர்களைக் கொண்டு, இப்பகுதியில் வாழும் விவசாய பெருமக்களுக்கு சேவை செய்து வருகிறது.

இச்சங்கத்தின் மூலம் நாள் ஒன்று சராசரியாக 351 லிட்டர் கொள்முதல் செய்யப்பட்டு, ஈரோடு ஆவின் நிறுவனத்திற்கு வழங்கி வருகிறது. கிராம பொருளாதார முன்னேற்றத்திற்கு கூட்டுறவு இயக்கம்தான் முன்னோடியாக செயல்பட்டு வருகிறது.

இடைத்தரகர்களை அழித்து கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகள் பால் வழங்கும் இந்த நிலையில் அரசின் பல்வேறு நலத்திட்டங்களை பெற்று பயனடைகிறார்கள்.

பொதுவாக கூட்டுறவு அமைப்புகளின் முக்கிய நோக்கம், உறுப்பினர்களின் பொரு ளாதார நலன்களை பேணுவதேயாகும்.

எனவே, ஒரு கூட்டுறவு சங்கம் பல்வேறு நோக்கங்களையும், பொருளாதார முன் னேற்றத்தினையும் நிறைவேற்றிட முடியும் என்று சொன்னால் மிகையாகாது என் றார். சங்கத் தலைவர் பி.வெங்கடாச லமூர்த்தி முன்னிலை வகித்தார்.

கோபி மற்றும் சத்தி சரக முதுநிலை ஆய்வாளர் (பால்வளம்) பி.எஸ்.சரவணன், ஈரோடு மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் கால்நடை மருத்துவர் ஆர்.ரவி சாஸ்திரி, ஈரோடு ஆவின் விரிவாக்க அலுவலர் ஆர்.சம்பத் குமார், ஈரோடு மாவட்ட கூட்டுறவு ஒன்றிய கூட்டுறவு பிரச்சார அலு வலர் கோ.வெங்கடராமன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இருகாலூர் காலனி பால் உற்பத்தி யாளர்கள் கூட்டுறவு சங்க செயலாளர் கே.சிவக்குமார் வரவேற்றார். சங்க பரிசோ தகர் ஜெ.திருவேங்கடம் நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img