fbpx
Homeபிற செய்திகள்தூத்துக்குடி மாநகராட்சி 60 வார்டுகளிலும் வாரம்தோறும் மருத்துவ முகாம் நடக்கும்- மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்

தூத்துக்குடி மாநகராட்சி 60 வார்டுகளிலும் வாரம்தோறும் மருத்துவ முகாம் நடக்கும்- மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்

தூத்துக்குடியில் “கலை ஞரின் வருமுன் காப்போம் திட்டம்“ சிறப்பு மருத்துவ முகாமை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி மாநக ராட்சி பாத்திமா நகரில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ தலைமை தாங்கினார்.

மாநக ராட்சி துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் முன்னிலை வகித்தார். நகர் நல அலுவலர் (பொறுப்பு) ஆர்த்தி வரவேற்புரையாற்றினார். சிறப்பு மருத்துவ முகாமை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: பொதுமக்க ளின் நலனுக்காக முதல் வர் ஸ்டாலின் ஆட்சிப் பொறுப் பேற்றதும் தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பின்னர் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத் தின் கீழ் மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி மாநகராட்சி யில் உள்ள 60 வார்டுகளிலும் வாரம்தோறும் மருத்துவ முகாம் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும். இவ்வாறு மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் துணை ஆணையர் (பொறுப்பு) சரவணன், சுகாதார ஆய்வாளர் ஸ்டாலின் பாக்கியநாதன், திமுக நிர்வாகிகள் பிரபாகரன், மதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முகாமில் 300க்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்று பயனடைந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img