fbpx
Homeபிற செய்திகள்இந்துஸ்தான் இன்ஜினியரிங் கல்லூரியில் 1297 மாணவ, மாணவிகளுக்கு பட்டம்

இந்துஸ்தான் இன்ஜினியரிங் கல்லூரியில் 1297 மாணவ, மாணவிகளுக்கு பட்டம்

கோவை மாவட்டம் ஒத்தக்கால் மண்டபத்தில் அமைந்துள்ள இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் 16வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு இந்துஸ்தான் கல்வி அறக்கட்டளை நிர்வாக அறங்காவ லர் சரஸ்வதி கண்ணையன் தலைமை தாங்கி வாழ்த்துரை வாங்கினார்.

கல்லூரியின் முதல்வர் முனைவர் ஜெயா வரவேற்புரையாற்றினார். முதன் மை செயல் அதிகாரி முனைவர் கருணா கரன் முதன்மை உரையாற்றினார். பட்ட மளிப்பு விழாவிற்கு அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகத்தின் ஆலோசகர் மம்தா ராணி அகர்வால் விருந்தினராக கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.

மேலும் இவ்வி ழாவில் 2015 முதல் 2017ம் ஆண்டு வரை பி.இ, பி.டெக். எம்சி ஏ மற்றும் எம்பில் உள்ளிட்ட படிப்புகள் பயின்று பட்டம் பெற்ற 1297 மாணவ மாணவிகளுக்கு பட்டம் வழங் கப்பட்டது.

24 மாணவ, மாணவிகள் பல்கலைக் கழக தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்றனர். அதில் 10 மாணவர்கள் தங்கப் பதக்கம் பெற்றனர் என்பது குறிப்பிடத் தக்கது. இந்நிகழ்ச்சியில் மாணவர்கள், பெற்றோர்கள், பேராசிரியர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

விழாவினை பயோமெடிக்கல் துறைத்தலைவர் பேராசிரியர் சரவண சுந்தரம் மற்றும் குழுவினர் ஓருங்கிணைத்தனர்.

படிக்க வேண்டும்

spot_img