fbpx
Homeபிற செய்திகள்ஜோதிடம், சமையல் சாட்ரூம் சீரிஸ் அறிமுகம்

ஜோதிடம், சமையல் சாட்ரூம் சீரிஸ் அறிமுகம்

இந்தியாவின் முன்னணி சமூக ஊடக தளமான ஷேர்சாட், ஜோதிடம் மீது ‘நல்ல நேரம்’ மற்றும் சமையற்கலைகள் மீது ‘ஆஹா என்ன ருசி’ என்ற பெயர்களில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள சாட்ரூம் சீரிஸ் அறிமுகம் செய்கிறது.

ஒரு வாரத்தில் இரண்டு அமர்வுகளாக இது செயல்படுத்தப்படும். டாக்டர் ஆதித்யா குருஜி, டாக்டர் ஆண்டாள் சொக்கலிங்கம் போன்ற நாடெங்கும் பிரபலமாக அறியப்படும் ஜோதிடவியல் நிபுணர்களிடமிருந்து பயனாளிகள் ஜோதிட கண்ணோட்டங்களை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பாக இந்த ஜோதிட ஆடியோ சாட்ரூம் நிகழ்வுகள் அமையும்.

மாநிலத்தில் முதன்மை யான ஹோட்டல்களில் பணியாற்றுகிற பிரபல செஃப்களுடன் கலந்துரை யாடவும் மற்றும் அவர்க ளிடமிருந்து கற்றுக் கொள் ளவும் சமையற்கலை ஆர்வலர்களுக்கு ‘ஆஹா என்ன ருசி’ என்ற பெயரில் வழங்கப்படும் செஃப் ஸ்பெ ஷல் சாட்ரூம் அமர்வு வகை செய்யும்.

இதில் செஃப் அஜித் குமார் (ஹோட்டல் அம் பாஸிடர் – பல்லவா) மற் றும் செஃப் தமிழரசன் (ஹோட்டல் கே – எம் ஸ்பெக்ட்ராவில் சோஸ் செஃப்) ஆகிய பிரபல சமையற்கலை நிபுணர்கள் பங்கேற்கின்றனர்.

தொகுப்பாளியாக சரண்யா சாய் பிரசாந்த் பங்கேற்கும் இந்நிகழ்வு, சனி, ராகு, கேது ஆகிய வற்றின் தாக்கங்கள் போன்ற தலைப்புகளை ஆய்வுசெய்து ஜோதிட கணிப்புகளை வழங்கும்.

இம்மாநிலத்தைச் சேர்ந்த உணவு ஆர்வலர்களின் சுவையுணர்வுக்கு தீனி போட சிறப்பான சமை யலுக்கான சாட்ரூம்களும் வழங்கப்படும்.

பிரபல உணவகங்களில் சமைக்கப்படும் சுவை மிக்க உணவுகளை 5,-10 நிமிடங்களுக்குள் வீட்டி லேயே செய்வதற்கான எளிதான வழிகளை கற்பிக்கின்ற இந்த அமர்வில் செஃப் அஜித்குமார், செஃப் தமிழரசன் போன்ற ஐந்து நட்சத்திர ஹோட்டல்களின் பிரபல செஃப்கள் இணைகின்றனர்.

வரும் ஏப்ரல் 11 வரை வழங்கப்படும் ஷேர்சாட் ஜோதிடவியல் சாட்ரூம் அமர்வுகள், திங்கள், புதன் கிழமைகளில் இரவு 7 முதல் 8 மணி வரை நடை பெறும்.

‘செஃப் ஸ்பெஷல் சாட்ரூம்’ அமர்வு, ஏப்ரல் 10 வரை, மாலை 6.30 முதல் 7.30 வரையும் மற் றும் ஞாயிற்றுக் கிழமை காலை 11 முதல் இரவு 12 மணி வரையும் நடத்தப்படுகிறது.

படிக்க வேண்டும்

spot_img