fbpx
Homeபிற செய்திகள்மகளிர் மேம்பாட்டிற்காக இலவச தையல் இயந்திரம் வழங்கும் விழா துணை மேயர் வெற்றிச்செல்வன் பங்கேற்பு

மகளிர் மேம்பாட்டிற்காக இலவச தையல் இயந்திரம் வழங்கும் விழா துணை மேயர் வெற்றிச்செல்வன் பங்கேற்பு

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை கிளை சார்பில் ஆதரவற்ற, ஏழைப் பெண்களுக்கு ‘இலவச தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி’ நேற்று (வியாழன்) மாலை 5 மணிக்கு கரும்புக்கடை ஹிதாயா மகளிர் இஸ்லாமியக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

ஜமாஅத்தின் கோவை மாவட்டத் தலைவர் ஜனாப் பி.எஸ்.உமர் பாரூக் துவக்கவுரை நிகழ்த்தினார். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கோவை மாநகராட்சியின் துணை மேயர் வெற்றிச் செல்வன் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கியதுடன் பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்களையும் வழங்கினார்.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் மாநிலத் தலைவர் மௌலவி முஹம்மது ஹனீபா மன்பஈ மற்றும் ஹிதாயா மகளிர் இஸ்லாமியக் கல்லூரியின் தாளாளர் மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர்.

இந்நிகழ்வில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் மாநிலப் பொதுச்செயலாளர் ஜனாப் கே.ஜலாலுதீன், மக்கள் சேவைத் துறை செயலாளர் ஜனாப் எல். ஜலாலுதீன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மகளிர் மேம்பாடு மற்றும் சுயமுன்னேற்றத்திற்கான இதுபோன்ற மக்கள் சேவைப் பணிகளை அனைத்து தரப்பினருடனும் இணைந்து சிறப்பான தாக்கம் ஏற்படுத்திடும் வகையில் பணியாற்ற ஒவ்வொருவரும் முயற்சிக்க வேண்டும் என இந்நிகழ்வு வலியுறுத்தியது.

படிக்க வேண்டும்

spot_img