fbpx
Homeபிற செய்திகள்ரூ.8.54 லட்சத்தில் வளர்ச்சித் திட்டங்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

ரூ.8.54 லட்சத்தில் வளர்ச்சித் திட்டங்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் விவசாய நிலங்களில் ரூ.8.54 இலட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து ஆட்சியர் டாக்டர் எஸ்.வினீத் ஆய்வு மேற்கொண்டார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

தமிழக அரசு விவசாயி களுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தி வருகிறது.
குறிப்பாக குறைந்த நீரில் அதிக மகசூல் பெற நுண்ணீர் பாசன திட்டம் சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியத்திலும் மற்றும் இதர விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியத்திலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கண்ணமநாயக்கனூர் கிராமத்தில் வேளாண்மை பொறியியல் துறை மூலம் விவசாயிக்கு ரூ.3,65,295 இலட்சம் மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ள சூரிய ஒளி சக்தி மூலம் இயங்கும் மின் மோட்டார் அமைக்கப்பட்டுள்ளது. ஆலம்பாளையம் கிராமத்தில் பிரதான் மந்திரி திட்டத்தின் மூலம் ரூ. 87,595 மதிப்பீட்டில் விவசாய நிலத்தில் நுண்ணீர் பாசனத் திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது.

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் மூலம் விவசாய நிலத்தில் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் ரூ.4.13 இலட்சம் மதிப்பீட்டில் குறைந்த விலை வெங்காயம் சேமிப்பு பட்டறை அமைக்கப்பட்டுள்ளது.

இவை அனைத்தும் மொத்தம் ரூ.8,54,272 இலட்சம் மதிப்பீட்டில் விவசாய நிலங்களில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டங்கள். இத்திட்டங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன என்றார் ஆட்சியர்.

உடுமலைப்பேட்டை உழவர் சந்தையில் வேளாண் பொருட்கள் விற்பனை செய்ய தேவை யான அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார் ஆட்சியர்.

புதிய உறுப்பினர் அடையாள அட்டைகளையும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்ப டுத்தப்படும் கிராமங்களான கல்லாபுரம் பகுதி நெல் சாகுபடி விவசாயிகளுக்கு உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்படும் சிங்க் சல்பேட் மற்றும் வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் பண்ணைக் கருவிகள் (கடப்பாறை (1) கதிர்அருவாள் (2) மண்வெட்டி(1) களைக் கொத்து (1) இரும்புச்சட்டி (1)) அடங்கிய தொகுப்பினை ஆதிதிராவிட விவசாயி களுக்கு மாவட்ட ஆட்சியர் டாக்டர் எஸ்.வினீத் வழங்கினார். ஆய்வின் போது வேளாண்மைத்துறை உதவி இயக்குநர் தேவி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img