fbpx
Homeபிற செய்திகள்திருப்பூர் குமரன் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம்

திருப்பூர் குமரன் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம்

லயன்ஸ் கிளப் திருப்பூர் குமரன் மருத்துவமனையில் நடைபெற்ற கண் சிகிச்சை மற்றும் மருத்துவ முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.

திருப்பூர் அவிநாசி சாலையில் லயன்ஸ் கிளப் திருப்பூர் குமரன் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு வெள்ளிக்கிழமை தோறும் பொதுமக்களுக்கு இலவச கண் சிகிச்சை மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது.

அதன்படி நேற்று நடைபெற்ற மருத்துவ முகாமை தன்னார்வலர் மெஜஸ்டிக் கந்தசாமி துவக்கி வைத்தார்.

சேவை நோக்கில் பல்நோக்கு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு அனைத்து விதமான சிகிச்சைகளும் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் மருந்து மற்றும் உயர்தர சிகிச்சை சலுகை கட்டணத்தில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் கொடுக்க திட்டமிட்டு செயல்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img