fbpx
Homeபிற செய்திகள்பயர்பேர்ட் இன்ஸ்டிடியூட் ஆப் ரிசர்ச் இன் மேனேஜ்மென்ட் கல்லூரி பட்டமளிப்பு விழா

பயர்பேர்ட் இன்ஸ்டிடியூட் ஆப் ரிசர்ச் இன் மேனேஜ்மென்ட் கல்லூரி பட்டமளிப்பு விழா

கோவை ஃபயர்பேர்ட் இன்ஸ்டிடியூட் ஆப் ரிசர்ச் இன் மேனேஜ்மென்ட் கல் லூரியின் இரண்டாவது பட்டமளிப்பு விழா, கல்லூரி வளாகத்தில் கொண்டாடப்பட்டது.

2018-20 மற்றும் 2019-21 ஆண்டு மேலாண்மை படிப்பை நிறைவு செய்த மாணவர்களுக்கான பட்ட மளிப்பு நிகழ்வு நிறுவன இயக்குநர் டாக்டர் பி. ஸ்ரீநிவாஸ் ராவ் தலை மையில், பட்டமளிப்பு ஊர்வலத்துடன் தொடங்கியது.

அறக்கட்டளை மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் கே.பி.ஆர். குழு மத்தின் தலைவர் டாக்டர் கே.பி.ராமசாமி, தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது ரிஸ்க் எடுப்பது, ஆர்வமுள்ள துறைகளில் சிறந்து விளங்குவது மற்றும் சொந்த சாம்ராஜ்யத்தை எவ்வாறு உருவாக்குவது என்பதை வலியுறுத்தினார்.

சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற, ஆர்எஸ்எம் ஆட்டோகாஸ்ட் நிர்வாக இயக்குநர் டாக்டர் கே.இளங்கோ, வாழ்க்கையில் நேர்மை, ஒழுக்கம், கடமை ஆகிய மூன்று அடிப்படை பண்புகளை கொண்டிருப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

வெற்றிகரமான தொழில் முனைவோரின் கதைகள் மற்றும் அவர்களின் வாழ்க்கையில் ஒழுக்கத்தின் பங்கைக் கண்டறிந்து புரிந்து கொள் ளுமாறு மாணவர்களுக்கு அவர் பரிந்துரைத்தார்.

அறங்காவலர் உறுப்பினர்கள் நிறுவனம் நிறுவப்பட்ட நோக்கங் களையும் அதன் மாண வர்களின் வாழ்க்கையை எவ்வாறு மாற்றியமைக்க வேண்டும் என்று கனவு காண்கிறது என்பதையும் மீண்டும் வலியுறுத்தினர்.

விழாவில், மாணவி ரெட்டி கவிதா கனக ராஜ், விஜய லக்ஷ்மியின் நினைவேந்தல் நடை பெற்றது. இயக்குனர் நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img