fbpx
Homeபிற செய்திகள்நா.மகாலிங்கம் நூற்றாண்டு வார விழா

நா.மகாலிங்கம் நூற்றாண்டு வார விழா

குமரகுரு கல்வி நிறுவ னங்களின் நிறுவனர், டாக்டர் நா.மகா லிங்கம் நூற்றாண்டு விழாவை யொட்டி, மார்ச் 17 முதல் 27 வரை பல்வேறு நிகழ்வுகள் திட்டமிடப்ப ட்டுள்ளன.

இந்த ஆண்டுக்கான அருட்செல்வர் நா. மகா லிங்கம் விருது 2022 டிவிஎஸ் குழுமங்களின் தலைவர், முனைவர் வேணு ஸ்ரீனிவாசன், தொ ழில், ஆய்வு மற்றும் சமூக முன்னேற்றத்தில் அவ ருடைய இணையில்லா பங்களிப்பிற்காக பெற்றார்.
விழாவிற்கு குமரகுரு கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் பி. கே.கிருஷ்ணராஜ் வாண வராயர் தலைமை தாங் கினார்.

பிரிகால் நிறு வனர் விஜய் மோகன், ரூட்ஸ் குழுமத்தின் கி ராமசாமி, குமரகுரு கல்வி நிறுவனங்களின் துணை தலைவர் டாக்டர் மாணிக்கம், கல்லூரி தாளா ளர் பாலசுப்ரம ணியம், இணை தாளாளர் சங்கர் வாணவராயர் ஆகியோர் கலந்து கொண்டனர்

KRIA க்ரியா என்ற ஆய்வு மையம், அடுத்த 5 ஆண்டுகளுக்கு சமூக மாற்றத்தினையும், புது கண்டுபிடிப்புகளையும் மேற்கொள் வதற்கு தொடக்க நிதியாக ரூபாய் 10 கோடியை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த ஆய்வு அமைப் பானது, தொழில் முனைவோர், கல்வி நிறுவனங்கள், முதலீட் டாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் மாணவர்களின் பங்களிப்புடன் செயல்பட உள்ளது. இந்த அமைப்பு சுற்றுப்புறச் சூழல், வாழ்வாதாரம், சமூக பொருளாதார மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்த உள்ளது.

இதன் இலக்கு நீடித்த மற்றும் அனைவரையும் உள்ளடக் கிய ஒருங்கிணைந்த வளர்ச்சி, தானியங்கி தொழில்நுட்பம், வணி கம், ஆய்வு மற்றும் கணினி மயம் ஆகிய துறைகளில் புத்தாக்க முன்னெடுப்புகளை செயல்படுத்த உள்ளது.

கல்வியில் சிறந்த 1300 மாணவர்களுக்கு, மகாத்மா காந்தி ஊக்கத்தொகையாக 1.3 கோடி மதிப்பில், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் ஆர்.வேல்ராஜ் முன்னிலை யில் வழங்கப்படவுள்ளது .

டாக்டர் நா. மகாலிங்கம் சதுரங்க அகாடமி உலக சதுரங்க பெடரேஷன், அகில இந்திய சதுரங்க பெடரேஷன், தமிழ்நாடு மாநில சதுரங்க அசோசியேஷன் இணைந்து டாக்டர் நா. மகாலிங்கம் சதுரங்க அகாடமி சார்பில் பதினெட்டு வயது குறைந்தோருக்கான மாநில அளவிலான சதுரங்க போட்டிகளை நடத்தியது.

நா. மகாலிங்கம் தமி ழாய்வு மையம், குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரியும் இணைந்து, தமிழியல் ஆய்வுகளும் அணுகுமுறைகளும், எனும் தலைப்பிலான ஆய்வ ரங்கம் நடந்தது.

குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூ ரியின் சார்பாக, ‘இந்திய தத்துவ மரபுகள்’, எனும் பொது தலைப்பின் கீழ் கருத்தரங்கம் நடந்தது.

படிக்க வேண்டும்

spot_img