fbpx
Homeபிற செய்திகள்மேட்டர் டிரைவ் 1.0 இவி மோட்டார் அறிமுகம்

மேட்டர் டிரைவ் 1.0 இவி மோட்டார் அறிமுகம்

மேட்டர், ஒரு தொழில்நுட்ப கண்டுபிடிப்பு ஸ்டார்ட்-அப் நிறுவனம். எதிர்கால நிலையான தீர்வுகளை உருவாக்குவதில் கவனம் செலுத்திவரும் நிலையில், இன்று புதிய அதிவேக மிட்- டார்க் (நடுநிலை-முறுக்குவிசை) மேட்டர் டிரைவ் 1.0 மோட்டாரை அறிமுகப்படுத்தியது. இது ஒருங்கிணைந்த நுண்ணறிவு வெப்ப மேலாண்மை அமைப்பு உள்பட முக் கிய கண்டுபிடிப்புகளின் வரிசையை உள்ளடக்கி, திருப்புமுனை உண்டாக்கும் புதிய அறிவார்ந்த டிரைவ்டிரெய்னாக அமைகிறது.

ஒரு வலுவான மற்றும் திறமையான டிரைவ்டிரெய்னை வழங்குவதில் காந்த வியல், மூலப்பொருள்கள் மற்றும் குளிரூட்டலை பயன்படுத்துவதற்கான அணுகுமுறையை, இந்த கண்டுபிடிப்பு புதுமையான மாற்று கண்ணோட்டத்தில் மறுபரிசீலனை பார்க்கிறது.

மேட்டர் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி மொகல்லால்பாய் கூறுகையில், “புது யுக இயக்கம் மற்றும் ஆற்றல் தீர்வுகள் மூலம் நிலையான மற்றும் புதுமையான இந்தியாவுக்கான எதிர்காலத்தை வடி வமைக்கும் ஒன்றை உருவாக்க விரும் புகிறோம்.

ஒருங்கிணைந்த நுண்ணறிவு வெப்ப மேலாண்மை அமைப்புடன் கூடிய புதுமையான மேட்டர் டிரைவ் 1.0 தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பு அடிப்படையில் அதன் வகைகளில் தனித்தன்மைமிக்க ஒன்றாகும். வரவி ருக்கும் எங்களது மின்சார வாகனங்களை இயக்க எங்களின் எதிர்காலம் சார்ந்த டிரைவ்டிரெய்ன் தயாராக உள்ளது.

எங்களது அடிப்படை கீழிருந்து மேற்செல் அணுகுமுறையால், இன்றைய உலகில் மின்சார வாகனங்கள் பார்க்கப்படும் விதத்தை நாங்கள் மாற்றுகிறோம். மேட் டர் டிரைவ் 1.0 என்பது ஒரு ரேடியல் ஃப்ளக்ஸ் மோட்டார் ஆகும்

அதிக சுற்றுப்புற வெப்பநிலை கொண்ட வெப்பமண்டல சூழலில் திறமையான, பாதுகாப்பான மற்றும் செயல்திறன் கொண்ட மின்சார வாகனங்களுக்கு வெப்ப மேலாண்மை முக்கியமானது என்று மேட்டர் நிறு வனம் நம்புகிறது.

இதை கருத்தில் கொண்டு, எங்களின் வரவிருக்கும் இருசக்கர செயல்திறன் மிக்க மின்சார வாகனங்களுக்கு ஆற்றலளித்து இயக்கும் மோட்டாரின் செயல்திறன், பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளித்துள்ளோம்.

குளிரூட்டும் அமைப்பானது முறையா ன தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மற்றும் பொறியியல் வடிவமைப்பின் சரியான கலவையாகும்.

இது மின் மேலாண்மை மற்றும் மோட்டாரிலிருந்து முறுக்குவிசை வழங்குவதில் புரட்சியை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது என்றார்.

படிக்க வேண்டும்

spot_img