fbpx
Homeபிற செய்திகள்சிஎஸ்கே உடன் ஐசிஐசிஐ வங்கி இணைந்து கூட்டு பிராண்ட் கிரெடிட் கார்டு அறிமுகம்

சிஎஸ்கே உடன் ஐசிஐசிஐ வங்கி இணைந்து கூட்டு பிராண்ட் கிரெடிட் கார்டு அறிமுகம்

இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான கிரிக்கெட் அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) உடன் இணைந்து, கூட்டு பிராண்ட் கிரெடிட் கார்டை ஐசிஐசிஐ வங்கி அறிமுகப்படுத்தி உள்ளது.

‘சென்னை சூப்பர் கிங்ஸ் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு’ [‘Chennai Super Kings ICICI Bank Credit Card’] என அழைக்கப்படும் இந்த கார்டு, பிரபலமான அணியின் மில்லியன் கணக்கான கிரிக்கெட் ரசிகர்களுக்காக பிரத்யேக சலுகைகளுடன் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய அட்டை, விளையாட்டு ஆர்வலர்களுக்கு தங்களுக்கு பிடித்த அணிகளுடன் இணைவதற்கும், கிரெடிட் கார்டின் பலன்களை பெறுவதற்கும் வங்கியால் வழங்கப்படும் பிரத்யேகமான கூட்டு பிராண்ட் கிரெடிட் கார்டுகளின் மற்றொரு கூடுதல் அம்சமாகும்.

இந்த கூட்டு செயல்பாடு குறித்து ஐசிஐசிஐ அதிகாரி சுதீப் ராய் கூறியதாவது: சிஎஸ்கே உடன் இணைந்து கூட்டு பிராண்ட் கிரெடிட் கார்டை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

இது சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஐசிஐசிஐ வங்கியிடமிருந்து பிரத்யேக சலுகைகள் மற்றும் தனித்துவமான வங்கி சலுகைகள் ஆகியவற்றை வழங்குகிறது. இந்த கார்டு இரண்டு நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பின் விளைவாகும் என்றார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட், தலைமை நிர்வாக அதிகாரி, கே.எஸ். விஸ்வநாதன் கூறியதாவது: இந்த கூட்டு செயல்பாடு, நாடு முழுவதும் உள்ள எங்கள் ரசிகர்களுக்கு பலனளிக்கும். மஞ்சள் நிறத்தை எங்கும் பரவச் செய்யும் என நம்புகிறோம் என்றார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்கும் வாடிக்கையாளர்கள் 5676766 என்ற எண்ணுக்கு ‘KING’ என எஸ்எம்எஸ் அனுப்பலாம்.

2000 வெகுமதி புள்ளிகளை புதிதாக இணைவது மற்றும் கார்டை புதுப்பித்தல் மூலம் கிடைக்கும் 2000 ரிவார்ட் பாயிண்ட்களை சிஎஸ்கே விற்பனை பொருள்களின் மீது சலுகையாக பெறலாம்.

சிஎஸ்கே விளையாட்டு போட்டிகளுக்கான சீசனின்போது டிக்கெட்டுகளை இலவசமாக பெறலாம். பயிற்சியை கண்டு களிக்கலாம்.

படிக்க வேண்டும்

spot_img