fbpx
Homeபிற செய்திகள்பிஎஸ்ஜி கல்லூரியில் மாற்றுத்திறனாளிகளுக்காக ‘தனித்துவம் வாய்ந்த ஆளுமை’ நிகழ்ச்சி

பிஎஸ்ஜி கல்லூரியில் மாற்றுத்திறனாளிகளுக்காக ‘தனித்துவம் வாய்ந்த ஆளுமை’ நிகழ்ச்சி

கோவை பிஎஸ்ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி யின், மூன்றாம் கை மன்றம், அறம் மன்றம் மற்றும் ஆரோக்கியத்திற்கான மையம் ஆகியவை இணைந்து, பிஎஸ்ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மாற்றுத் திறனாளிகளுக்காக ‘தனித் துவம் வாய்ந்த ஆளுமை’ என்ற ஒரு நாள் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன.

முதலில், மாணவர்கள் பலர் தங்கள் திறமைகளை பல்வேறு வகைகளில் வெளிப்படுத்த முன்வந்தனர்.

புகைப்படம் எடுத்தல், கவிதை, கட்டுரை எழுது தல், ஸ்கிரிப்ட் எழுதுதல், கதை எழுதுதல், பாடுதல், ஓவியம், வினாடி வினா போட்டி, கட்டுரை எழு துதல் போட்டிகளில் பங் கேற்ற மாணவர்களை கல் லூரி முதல்வர் பாராட்டி பரிசுகளை வழங்கினார்.

அறங்காவலர், செயலா ளர், முதல்வர் ஆகியோரின் ஆதரவுடன், இணைப் பேராசிரியை மற்றும் ஒருங்கிணைப்பாளர் மூன்றாம் கை மன்றம் டாக்டர் டி.சரஸ்வதி, சினேகலதா, சௌமியா, சுனில்குமார், ரோஷன் ஆகியோர் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர்.

நிகழ்ச்சியில், மருத்துவ ஊட்டச்சத்து துறையின் இணைப் பேராசிரியை தலைவர் டாக்டர் டி.சாந்தி, ‘ஆரோக்கியமான வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுப்பது’ என்ற தலைப்பில் பேசினார்.

உளவியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் கே.பி.நாச்சிமுத்து ‘நீயாக இருப்பது’ என்ற தலைப் பிலும், தமிழ்த்துறை இணைப் பேராசிரியை தலைவர் டாக்டர் ஆர்.ஜெயந்தி, தொழில் மற்றும் சுயமுன்னேற்றம் என்ற தலைப்பிலும் பேசி னர்.

படிக்க வேண்டும்

spot_img