fbpx
Homeபிற செய்திகள்ஸ்ரீராமகிருஷ்ணா கலைக் கல்லூரி- டிசிஎஸ் அயான் நிறுவனம் ஒப்பந்தம்

ஸ்ரீராமகிருஷ்ணா கலைக் கல்லூரி- டிசிஎஸ் அயான் நிறுவனம் ஒப்பந்தம்

ஸ்ரீராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, டிசிஎஸ் அயான் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டது.

ஸ்ரீராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், பிஎஸ்சி கணினி அறிவியல் மற் றும் டேட்டா அனாலிடிக்ஸ் என்ற புதிய பாடப்பிரிவு வரும் 2022-23-ம் கல்வியாண்டில் தொடங் கப்பட உள்ளது.

இதற்கான பாடத் திட்டத்தை டிசிஎஸ் அயான் நிறுவனம் வடிவமைத்துள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சி, கல்லூரி கலையரங்கில் நேற்று (மார்ச் 25) நடந்தது.

எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங் காவலர் டி.லட்சுமி நாராயண சுவாமி தலைமை வகித்து பேசியதாவது:
கடந்த 35 ஆண்டு கால சேவையின் மூலமாக மாணவர் சமுதாயத்தை உலக அளவிலான சவால் களை எதிர்கொள்ள உருவாக்கி வருகிறது.

மாணவர்களிடையே தொழி ல்முனைவுத் திறன், ஆராய்ச்சித் திறன் ஆகியவற்றை உருவாக்கி வருகிறோம். ஒருங்கி ணைந்த தொழில் முறை சார்ந்த படிப்புகளுக் கும் முன்னுரிமை அளிக் கப்பட்டு வருகிறது. நம்மு டைய நாடு கல்வித் துறையில் அபரிமிதமான வளர்ச்சியை அடைந்து வருகிறது.

தொழில் நிறு வனங்கள் தொழில்முறை சார்ந்த பட்டதாரிகளை எதிர் நோக்குகிறது. அதற்கேற்ற வகையில் மாணவர்களின் திறன் அதிகரிக்க முயற்சி மேற் கொள்ளப்படும் என்றார்.

டிசிஎஸ் அயான் நிறுவன உயர்கல்விப் பிரிவின் தேசிய தலைவர் ரவீந்திர கெம்பவி பேசிய தாவது:கேட், ஜிப்மர் உள்ளிட்ட தேர்வுகளுக்கான பாடத்திட்டங் களை உருவாக்கி வருகி றோம். ஏராளமான கல்லூரிகள் இதனால் பயனடைந்து வருகின்றன. ஆராய்ச்சிகளுக்கும் முக் கியத்துவம் அளிக்கிறோம்.

ஆசிரியர்கள் மற்றும் தொழில்துறையினரிடம் பயிற்சி பெறும்போது மாணவர்கள் கூடுதல் தகுதியைப் பெறுவார்கள். இதன்படி டிசிஎஸ் அயான் நிறுவன வல்லு நர்களைக் கொண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.

இந்த ஒப் பந்தத்தின் மூலம் டிசிஎஸ் நிறுவனத்தில் இன்டர்ன்ஷிப் பயிற்சி, தொழில்துறையினர் நடத்தும் வகுப்புகள், தொ ழில் நிறுவனங்களைப் பார்வையிடல், இப்படிப் பில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு ஏற் படுத்தித் தரப்படும் என்றார்.

எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட் டளை நிர்வாக அறங்காவலர் டி.லட்சுமி நாராயணசுவாமி, டிஎசி எஸ் அயான் நிறுவன உயர்கல்விப் பிரிவின் தேசிய தலைவர் ரவீந்திர கெம்பவி ஆகியோர் கையொப்பமிட்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டனர்.

டிசிஎஸ் அயான் நிறுவன உயர்கல்விப் பிரிவின் மண்டலத் தலைவர் சுரேஷ்குமார், ஸ்ரீராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார், தேர்வு கட்டுப்பாடு அலுவலர் முனைவர் வி.விஜயகுமார் உள்ளிட்டோர் பங் கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img