fbpx
Homeபிற செய்திகள்மத்திய அரசின் ‘நீர் காவலர்’ விருது பெறும் கோவை இளைஞர் மணிகண்டன்

மத்திய அரசின் ‘நீர் காவலர்’ விருது பெறும் கோவை இளைஞர் மணிகண்டன்

மத்திய நீர்வளத்துறை வழங்கும் “நீர் காவலர்” விருதிற்கு கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு தேர்வு செய் யப்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தி யில் வரவேற்பை பெற்றுள்ளது.

நீர்நிலைகளை பாதுகாக்கும் நோக்கில் சேவை செய்பவர்களுக்கு மத்திய நீர்வளத்துறை சார்பில் “நீர் காவலர்” விருது வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு வரும் மார்ச் 30ம் தேதி டெல்லியில் நடைபெறும் ‘ஜல் பிரஹாரி சம்மான்-2022’ எனும் நிகழ்வில், நீர்நிலைகள் பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை பணிக ளுக்காக செயல்பட்டுவரும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் கவுர விக்கப்பட உள்ளனர்.

இந்த விருதுக்கு கோவை மாவட் டத்தில் செயல்பட்டு வரும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக கோவையில் உள்ள குளங்களில் நீர் இருப்பை உறுதி செய்யும் விதமாக ஏராளமான பணியை மேற்கொண்ட மணிகண்டன், ஒவ் வொரு ஞாயிறன்றும் மக்களை திரட்டி குளங்களை தூர்வாரும் பணியை மேற்கொண்டு வருகிறார்.

மேலும், கோவை வெள்ளலூர் குளக்கரையில் மியாவாக்கி முறை யில் மரக்கன்றுகளை நடவு செய்து அடர்வனத்தை உருவாக்கி மற்ற மாவட்டங்களுக்கு முன்னு தாரணமாக திகழ்ந்துள்ளார் மணி கண்டன்

பருவகால மாற்றத்தால் பல அரசு நிர்வாகங்கள் நீர் மேலாண் மையை முறையாக நிர்வாகிக்க முடியாமல் திணறி வரும் சூழலில், தன்னார்வலர்கள் நீர் நிலை மேலாண்மையில் தன்னிகரில்லாமல் செயல்பட்டு மத்திய அரசின் விருதை பெறுவது பாராட்டத்தக்கது.

படிக்க வேண்டும்

spot_img