fbpx
Homeபிற செய்திகள்ஜே.எஸ்.எஸ்.பார்மசி கல்லூரியில் தேசிய கருத்தரங்கு

ஜே.எஸ்.எஸ்.பார்மசி கல்லூரியில் தேசிய கருத்தரங்கு

ஜே.எஸ்.எஸ். பார்மசி கல்லூரியில், அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில், ஜே.எஸ்.எஸ். உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி அகாடமி நிதியுதவியுடன், ‘மூலிகை மருத்துவம் மற்றும் நானோ தொழில்நுட்பத்தில் புற்றுநோய் மற்றும் நரம்பியல் சார்பான மருத்துவத்தில் வளர்த்து வரும் சிகிச்சை முறைகள்’ என்ற தலைப்பில் இரண்டு நாள் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது

பேராசிரியர் மற்றும் துணை முதல்வர் டாக்டர் அப்சல் அசாம் வரவேற்றார். நிகழ்ச்சியின் அமைப்புச் செயலாளரும் துறைத்தலைவருமான டாக்டர் கலாகோட்லா சங்கர் மாநாட்டின் முக்கியத்துவத்தை விளக்கினார்.

கோவை கற்பகம் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் முனைவர் சுடலைமுத்து தலைமை விருந்தினராக கலந்துகொண்டார்,

ஜே.எஸ்.எஸ். மருத்துவக் கல்லூரியின் உயிர்வேதியியல் துறை தலைவர் முனைவர் சுப்பா ராவ், இணைப் பேராசிரியர் பூர்ணிமா மதி வாணன், அமெரிக்காவில் உள்ள அரிசோனா பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியர் முனைவர் கெர்ரி கூப்பர், முனைவர் கார்ல் க்ரூப், அமெரிக்காவின் டோலிடோ பல்கலைக்கழகப் பேராசிரியர் முனை வர் மடம் விஜய குமார் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசினர்.

சென்னை இந்திய தொழில்நுட்ப நிறுவனம், பயோ டெக்னாலஜி துறை பேராசிரியர் டாக்டர் சுரேஷ் ராயலா, ஹைதராபாத் விஷ்ணு ரிசர்ச் நிறுவனத்தின் முதல் வர் டாக்டர் அல்லூரி ரமேஷ், ஹை தராபாத் இந்திய இரசாயன தொழில்நுட்ப நிறுவனம் முதன்மை விஞ்ஞானி டாக்டர் சுரேஷ் பாபு ஆகியோர் கலந்துகொண்டனர்.

மாநாட்டில் இந்தியாவில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட ஆசி ரிய உறுப்பினர்கள், ஆராய்ச்சி அறிஞர்கள், முதுகலை மற்றும் இளங்கலை பட்டதாரிகள், டிப்ளமோ மாணவர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img