fbpx
Homeபிற செய்திகள்ஹைட்ரஜனின் மகத்தான சாத்தியக் கூறுகள்: இந்தியா-ஜப்பான் கருத்தரங்கில் தகவல்

ஹைட்ரஜனின் மகத்தான சாத்தியக் கூறுகள்: இந்தியா-ஜப்பான் கருத்தரங்கில் தகவல்

ஜப்பானுக்கும் இந்தி யாவுக்கும் இடையே தூதரக உறவுகள் துவங்கி யதன் 70-வது ஆண்டு நிறைவையொட்டி, ஜப்பானின் பொருளாதார வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும், புதிய ஆற்றல் மற்றும் தொழில்துறை தொழில்நுட்ப மேம்பாட்டு அமைப்பு இந்தியா – ஜப் பான் ஹைட்ரஜன் ஆற்றல் கருத்தரங்கை நடத்தியது.

கருத்தரங்கு, ‘இந்தியா-ஜப்பான் ஹைட்ரஜன் மாதத்தின்’ தொடர் நிகழ்வு களில் ஒன்றாகும். தருண் கபூர் துவக்க உரையாற்றினார்.

நெடோ இந்தியா தலைமை பிரதிநிதி யோஷி ரோ ககு பேசு கையில், ஜப்பானில் உள்ள பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் நீண்ட காலமாக ஹைட்ரஜன் ஆற்றலை பயன்படுத்தி வருகின்றன.

நெடோ அமைப்பு ஹைட்ரஜன் ஆற்றல் தொழில்நுட்பத்தை நிறுவியதில் இருந்தே, சுமார் 40 ஆண்டு வரலாற்றைக் கொண்டுள்ளது.

ஜப்பானில் உலகின் முன்னணி ஹைட்ரஜன் மற்றும் அமோனியா தொழில்நுட்பங்கள் உள் ளன.

அதேசமயம் இந்தியா உலகின் மிக உயர்ந்த அளவிலான ஹைட்ரஜன் திறனைக் கொண்டுள்ளது. இவற்றை பரஸ்பரமாக பயன்படுத்தி பொருளாதார வளர்ச்சியின் புதிய இலக்கை எட்ட முடியும். இந்த முயற்சியில் ஜப்பான் உங்களின் இயற்கையான கூட்டாளியாக இருக்க வேண்டும் என்பதையே விரும்புகிறது என்றார்.

நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி அமிதாப் கான்ட் பேசுகையில், ஆற்றல் மாற்றத்தில் பசுமை ஹைட்ரஜனின் பங்கு குறிப்பிடத்தக்கதாக இருக்கும்.

அதேவேளையில் இதை சமாளிக்க சில தொழில்நுட்ப சவால் களை எதிர்கொள்ள வேண்டிய சூழல் இருக் கும். தற்போதைய மதிப்பீட்டின்படி, 2030-ம் ஆண்டுக்குள் ஒரு கிலோ பசுமை ஹைட்ரஜனின் விலை 1 டாலராகவும், 2050-க்குள் ஒரு கிலோ விலை 0.7 டாலராகவும் குறையும்.

இந்தியாவில் திறமைமிக்க ஏராளமான தொழில் முனைவோர் உள்ளனர். இவற்றை கொண்டு குறைந்த விலையில் எங்க ளால் ஹைட்ரஜனை உற் பத்தி செய்ய முடியும். இதன் காரணமாக வரும் காலங்களில் ஹைட்ரஜன் விலை குறைய வாய்ப்பு உள்ளது என்றார்.

எச்டி நிர்வாக இயக்குனர் அலோக் சர்மா பேசுகையில், புதுப்பிக் கத்தக்க எரிசக்திக்கு தேவை யான பொருட்களின் விலை நாளுக்கு நாள் குறைந்து வருவதன் காரண மாக இந்த துறைக்கு பிர காசமான எதிர்காலம் உள்ளது என்றார்.

சர்வதேச ஒத்துழைப்புக்கான ஜப்பான் வங்கியின் புதுடெல்லிக்கான தலைமை பிரதிநிதி தோஷிஹிகோ குரிஹாரா, நெடோ அமைப்பின் அதிகாரி ஈஜி ஒஹிரா, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சக இணைச் செயலாளர் வந்தனா குமார், இந்தியாவிற்கான ஜப்பான் தூதர் குனிஹிகோ கவார்சு, கேரள மாநில போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளர் ஜோதி லால் ஆகியோர் பேசினர்.

படிக்க வேண்டும்

spot_img