fbpx
Homeபிற செய்திகள்கோவை எஸ்.பி.ஓ.ஏ பள்ளி மாணவன்: உலக வில்வித்தை போட்டியில் பங்கேற்கும் நவீன்குமாருக்கு ரூ.1 லட்சம் நிதி...

கோவை எஸ்.பி.ஓ.ஏ பள்ளி மாணவன்: உலக வில்வித்தை போட்டியில் பங்கேற்கும் நவீன்குமாருக்கு ரூ.1 லட்சம் நிதி உதவி

கோவை சொக்கம்புதூர் அருகிலுள்ள எஸ்.பி.ஓ.ஏ மெட் ரிகுலேஷன் மேல் நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு நிகழ்வு நடைபெற்றது இந்நி கழ்ச்சிக்கு பள்ளியின் அறக்கட் டளை தலைவர் நல்லா பெருமாள்சாமி தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினர் களாக பள்ளி யின் செயலாளர் டாக்டர் ஆர்.பாலாஜி, பள்ளியின் முன்னாள் மாணவியும் குழந்தைகள் நல சிறப்பு மருத் துவருமான டாக்டர் சுருதி ரவிக்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சிக்கு வருகை வந்திருந்த பெற்றோர்கள் மற்றும் மாணவர்களை பள்ளியின் தாளாளர் வர வேற்றுப் பேசினார்.
இந்நிகழ்வின் போது பள்ளி மாணவ மாணவி களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது

நிகழ்ச்சியில் தேசிய அளவில் வில்வித்தை போட்டியில் வெற்றி பெற்று அடுத்த மாதம் பிரான்ஸ் நாட்டில் உலக அளவில் நடைபெறும் வில்வித்தை போட்டியில் பங்கேற்க இருக்கும் பதினோராம் வகுப்பு மாணவன் நவீன் குமாருக்கு பள்ளி நிர்வாகத்தின் சார்பில் ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது. பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் எஸ்.செல்வகுமார் வாழ்த்தி மலர்கொத்து வழங்கினார்

நிகழ்வில் பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் ராம்குமார் விஜயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் பள்ளி தலைமை ஆசிரியர் ஜீவா செந்தில் நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img