fbpx
Homeபிற செய்திகள்பூத்துக் குலுங்கும் ரோஜா மலர்கள்: ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்

பூத்துக் குலுங்கும் ரோஜா மலர்கள்: ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கோடைக்காலங்களில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகைக் காக ஏற்காட்டில் தோட்டக்கலைத் துறை பராமரிக்கும் அரசு பூங்காக்களில் முன்னேற்பாடுகள், பூங்கா வடிவமைப்பு, மலர் செடிகள் நடவு போன்ற பணிகள் தொடர்ந்து நடை பெற்று வருகின்றன.

கடந்த 2 ஆண்டுகளாக கோடை விழா நடைபெறாத நிலையில், இந்த ஆண்டு கோடை விழா நடைபெற வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.

கடந்த சில நாட்களாகவே கர்நாடகம், புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் ஏற்காட்டுக்கு வர தொடங்கி உள்ளனர்.

நேற்று விடுமுறை நாள் என்பதால் ஏற்காடு சுற்றுலாப் பகுதியான படகு இல்லம், ஏரி பூங்கா, அண்ணா பூங்கா, சேர்வராயன் கோவில் மலைப்பகுதி, கரடியூர் வனகாட்சிப்பகுதி, பக்கோடா காட்சி முனை, ரோஜா தோட்டம், லேடிசீட், தாவரவியல் பூங்கா ஆகிய பகுதிகளை சுற்றுலாப்பயணிகள் கண்டு மகிழ்ந்தனர் மற்றும் அண்ணா பூங்காவில் கோடை விழாவுக்கு ஆயத்தமாக இருக்கும் ரோஜா செடிகள் அதிக அளவில் ரோஜா பூக்கள் காண அதிகளவில் குவிந்த சுற்றுலா பயணிகள் அழகைக் கண்டு ரசித்து மகிழ்ந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img