fbpx
Homeபிற செய்திகள்கோவை ஸ்டேன்ஸ் ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி- மாணவர்கள் அசத்தினர்

கோவை ஸ்டேன்ஸ் ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி- மாணவர்கள் அசத்தினர்

கோவை அவிநாசி ரோடு ஸ்டேன்ஸ் ஆங்கிலோ – இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களின் படைப்பாற்றலையும் அறி வியல் ஆர்வத்தையும் மேம்படுத்தும் நோக்கில் ஆராயும் அறிவியல் என்ற தலைப்பில் அறி வியல் கண்காட்சி நடை பெற்றது.

முன்னதாக, காலை வழிபாட்டுக் கூட் டத்தில் அறிவியல் கண் காட்சிக்கான வழிகாட்டல் நெறிமுறைகளை பள் ளியின் அறிவியல் துறைத் தலைவர் எடுத்துரைத்தார்.

பின்னர் மாணவர்களின் அறிவியல் படைப்புகள் வகுப்பறைகளில் காலை யிலேயே காட்சிப் படுத் தப்பட்டன. மாணவர்கள் தங்கள் படைப்புகளை ஆர்வத்துடன் இடம் பெறச் செய்தனர். பள்ளியின் அறிவியல் துறை கண்காட்சியை ஒருங்கிணைத்தது.

இந்த கண்காட்சியை பள்ளியின் முதல்வர் செலின் வினோதினி தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினர்களாக பள்ளியின் தாளாளர் மற்றும் பொருளாளர் பங்கேற்றனர். அறிவியல் ஆசிரியர்களைக் கொண்ட குழு, சிறந்த படைப்புகளை தேர்வு செய்தது.

பின்னர் வகுப்பு வாரியாக வெற்றிச் சான் றிதழ்களும் பங்கேற்புச் சான்றிதழ்களும் மாணவர் களுக்கு வழங்கப்பட்டன.

பெற்றோர்கள் திரளாக வந்து கண்காட்சியை பார் த்ததோடு, மாணவர்களின் அறிவியல் படைப்புகளைக் கண்டு வியந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img