fbpx
Homeபிற செய்திகள்திருப்பூர் டி சர்ட் அணிந்தால் கேன்சர் வருமா? தி டாலர் சிட்டி இயக்குனர் வினித் சர்ச்சை...

திருப்பூர் டி சர்ட் அணிந்தால் கேன்சர் வருமா? தி டாலர் சிட்டி இயக்குனர் வினித் சர்ச்சை பேட்டி

திருப்பூரில் தயாரிக்கப் படும் டி-சர்டுகள் கேன்சரை உருவாக்கும் அபாயம் இருப்பதாக தி டாலர் சிட்டி திரைப்பட இயக்குனர் அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டுள்ளார்.

கோவை பத்திரிகையா ளர் மன்றத்தில் தி டாலர் சிட்டி திரைப்படத்தின் இயக்குனர் வினித் செய்தி யாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது:
இந்தத் திரைப்படம் திருப்பூரை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை இந்த படத் திற்கான படப்பிடிப்பு நடைபெற்றது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக இந்தப் படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் போனது.

ஒரு டி-ஷர்ட் அணிந் தால் கேன்சர் வரும் என்பதை உங்களால் நம்ப முடியுமா-? ஆனால் அதுதான் திருப்பூரில் நடைபெறுகிறது. நாம் பயன்படுத்தும் ஆடைகளில் நம்மை பாதிக்கும் பல்வேறு மூலக்கூறுகள் உள்ளன. இதனை இந்தப் படத்தில் தெளிவாக விளக்கி உள்ளேன்.

ஏற்றுமதிக்கு என வேறு விதமான ஆடைகளையும் உள்நாட்டிற்கு மட்டமான ஆடைகளையும் திருப்பூர் கொடுக்கிறது. இதனை மக்களுக்கு தெளிவுபடுத்த இந்த படத்தை எடுத்துள்ளேன்.

10 மொழிகளில் இந்த படம் தயாராகியுள்ளது. இந்த படத்தை தயாரிக்க ரூபாய் 60 லட்சம் வரை செலவாகியுள்ளது.

கோவை, திருப்பூர், பெங் களூர், மங்களூர் மும்பை மற்றும் ராஜஸ்தான் ஆகிய இடங்களில் இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு நடந்துள்ளது.

விரைவில் இந்த படம் ஓடிடியில் வெளியிடப்பட உள்ளது. இந்தப் படத்தில் நடித்துள்ள நாயகர்கள் விபரம் அடுத்தடுத்து வெளியாகும். இவ்வாறு அவர் கூறி னார்.

படிக்க வேண்டும்

spot_img