fbpx
Homeபிற செய்திகள்குப்பை அள்ளும் வாகனங்கள் கோவை மேயர் கல்பனா ஆய்வு

குப்பை அள்ளும் வாகனங்கள் கோவை மேயர் கல்பனா ஆய்வு

கோவை வ.உ.சி மைதானத்தில், மாநகராட்சியில் 100 வார்டுகளிலும் குப்பை அள்ளுவதற்கு பயன்படுத் தப்படும் 56 மாநகராட்சி மற்றும் ஒப்பந்ததாரர்கள் வாகனங்களை மேயர் கல்பனா இன்று (ஏப்.5) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஓட்டுநர்கள் மற்றும் மண்டல சுகாதார ஆய்வாளர்களிடம் மேயர் கூறியதாவது:
கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளிலும் நாள்தோறும் சேகரமாகும் குப்பையை எடுப் பதற்காக, மாநகராட்சியில் 11 வாகனங்கள், 45 தனியார் ஒப்பந்த தாரர் வாகனங்கள் என மொத்தம் 56 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

மாநகராட்சிப் பகுதிகளில் சேகரமாகும் குப்பையை வலை யினால் மூடி சாலைகள் மற்றும் தெருக்களில் சிதறாமல் வெள்ளலூர் குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்படுகிறது. குப்பை எடுக்கும் வாகனங்களுக்கு முழு கொள்ளளவு கொண்ட குப்பைகளை ஏற்ற வேண்டும்.

வாகனங்களுக்கு ஒதுக் கப்பட்டுள்ள வார்டுகளில் அனைத்து தெருக்களிலும் நாள்தோறும் குப்பையை எடுக்க வேண்டும். தேவைப்படும் இடங்களில் இரவு நேரங்களிலும் குப்பை அகற்ற வாக னங்களை பயன்படுத்த வேண்டும்.

ஒப்பந்ததாரர் வாகனங்கள் எப்.சி முறையாக செய்யப்படுகிறதா? ஆர்.சி. மற்றும் இன்சூரன்ஸ் வாக னங்களில் வைத்துள்ளார்களா என்பது குறித்தும், நாளொன்றுக்கு எத்தனை முறை குப்பை எடுக்கும் வாகனம் வெள்ளலூர் குப்பைக் கிடங்கிற்கு சென்று வருகிறது என்பதையும் கேட்டறிந்தார்.

மாநகராட்சியிலுள்ள 100 வார்டுகளிலும் தேங்கும் குப்பை தடையின்றி அகற்ற சேவை மனப்பான்மையுடன் பணியாற்ற வேண்டும். குப்பை இல்லா மாநகரமாக உருவாக்க முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு மேயர் கல்பனா பேசினார்.

ஆய்வின்போது துணை மேயர் ரா.வெற்றிச்செல்வன், மாநகராட்சி துணை ஆணையாளர் மரு.மோ.ஷர்மிளா, நகர்நல அலுவலர் மரு.சதீஷ்குமார், மண்டல உதவி ஆணையர்கள் திரு.சரவணன், சங்கர், மோகனசுந்தரி, மாரிச்செல்வி, அண்ணாதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img