fbpx
Homeபிற செய்திகள்சென்னையில் ‘கனா’ மருத்துவமனையை உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னையில் ‘கனா’ மருத்துவமனையை உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

பெண்களின் ஆரோக்கியம் சம்பந்தமாகவும் அவர்களின் கருவுறுதல் கனவுகளை நனவாக்கும் வகையில் அவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கும் விதமாக, சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் ‘கனா’ மருத்துவமனையை உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. மற்றும் திரைப்பட இயக்குனர் கிருத்திகா உதயநிதி, மகப்பேறு மருத்துவர் ஜெயம் கண்ணன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

இந்த மருத்துவமனை பெண்களின் முழுமையான ஆரோக்கியத்திற்கான சிறப்பு மையமாக விளங்குவ தோடு ஒரு முழுமையான கருத்தரிப்பு மையமாகும்.

புதி தாகத் தொடங்கப்பட்ட இந்த மருத்துவம னையில், கர்ப்பம் தரித்தல் முதல் பிரசவம் வரையிலான காலத்தில் தேவையான அனைத்து மருத்துவ ஆலோசனைகளையும் வழங்கும் வகையில் மூத்த அனுபவம் வாய்ந்த மகப்பேறு மருத்துவர்கள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இது கர்ப்பிணி பெண்களுக்கான அனைத்து மருத்துவ சேவைகளையும் வழங்கும்.
மருத்துவமனையின் நோக்கமே குறைந்த கட்டணத்தில் தரமான கருவுறுதல் பராமரிப்பு சேவைகளை வழங்குவதாகும்.

குழந்தை பெற விரும்பும் அனைத்து தம்பதிகளின் கனவையும் இது நனவாக்கும். நம்பிக்கை, இரக்கம், அனைவரும் எளிதில் அணுகும் தன்மை, குறைந்த கட்டணம், ரகசியத்தன்மை, வெளிப்படைத்தன்மை ஆகிய வற்றை இம்மருத்துவமனை முக்கிய குறிக்கோளாகக் கொண்டு செயல்படும்.

கனா மருத்துவமனை இயக்குநர் டாக்டர் பிரியா கல்யாணி கூறுகையில், இங்கு கருவுறுதல் மதிப்பீடுகள், அண்டவிடுப்பின் தூண்டல், கருப்பையக கருவூட்டல், சோதனைக் குழாய் மூலம் கருவுறுதல் மற்றும் ஊசி மூலம் விந்தணுவை செலுத்தும் முறை உள் ளிட்ட கருத்தரிப்பு சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும்.

இத்துடன் இங்கு, உடற்பயிற்சி, இடுப்பிற்கான பிசியோதெரபி, ஹார்மோன் ஆரோக்கியத்திற்கான யோகா, மன அழுத்தத்தைக் குறைத்து மனதிற்கான வலிமை பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகளும் வழங்கப்படும்.

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு உதவிடும் வகையில் லீலா அறக்கட்டளை ‘கனவு மெய்ப்பட வேண்டும்’ என்னும் திட்டத்தை துவங்க உள்ளது.

இதன் மூலம் இலவசமாக 10 பெண்களில் ஒருவருக்கு கருப்பையக கருவூட்டல் சிகிச்சை, மாதத்திற்கு இரண்டு பெண்களுக்கு சோதனைக் குழாய் மூலம் கருவுறுதல் சிகிச்சை, நான்கு மாதங்களுக்கு ஒருமுறை கிராமப்புறங்களில் இலவச மகளிர் சுகாதார முகாம்கள் ஆகியவை நடத்தப்படும் என்றும் கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img