fbpx
Homeபிற செய்திகள்பில்ட் இன்டெக் - வாட்டர் இன்டெக் கண்காட்சிகள் கோவை கொடிசியாவில் 8-ம் தேதி துவங்குகிறது

பில்ட் இன்டெக் – வாட்டர் இன்டெக் கண்காட்சிகள் கோவை கொடிசியாவில் 8-ம் தேதி துவங்குகிறது

கட்டுமானத் துறை சார்ந்த ‘பில்ட் இன்டெக்’ மற்றும் தண்ணீர் தொழில்நுட்பம் சார்ந்த ‘வாட்டர் இன்டெக்’ கண்காட்சிகள், கொடிசியா சார்பில் வரும் 8-ம் தேதி துவங்குகிறது.

இது குறித்து கொடிசியா தலைவர் எம்.வி.ரமேஷ் பாபு தெரிவித்துள்ளதாவது:
கொடிசியா சார்பில் சர்வதேச அளவிலான கட்டட மற்றும் கட்டுமானம் சார்ந்த தொழில் நுட்பங்களை காட்சிப்படுத்தும் ‘பில்ட் இன்டெக்’, ‘வாட்டர் இன்டெக்’ கண்காட்சிகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கொரோனா நோய்த் தொற்று கட்டுப்பாடுகள் காரணமாக, கடந்த பிப்ரவரி மாதம் நடத்த வேண்டிய இக்கண்காட்சிகளை தற்போது வரும் 8-ம் தேதி முதல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் 11-ம் தேதி வரை இக்கண்காட்சிகள் நடைபெறும்.

அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா தொழிற் காட்சி வளாகத்தில் இக்கண்காட்சிகள் 4 அரங்குகளில் 450 ஸ்டால்களில் நடக்கின்றன. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து கட்டட மற்றும் கட்டுமானம் தொடர்பான துறை நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.

பல சர்வதேச நிறுவனங்களின் சார்பிலும், தொழில் நுட்பங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. பல்வேறு உற்பத்தி சார்ந்த நிறுவனங்களும் பங்கேற்கின்றன.

சென்னையை அடுத்து கோவையில் பெரிய அளவில் கட்டுமானப் பணிகள் நடக்கின்றன. ஆகவே, இக்கண்காட்சியை தொழில்துறையி னர் தகுந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். பேட்டியின்போது பில்ட் இன்டெக் – வாட்டர் இன்டெக் தலைவர் ஜி.ராம்மோகன், துணைத்தலைவர் ஆர்.சிவகுமார், கொடிசியா செயலாளர் எம்.கார்த்திகேயன் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img