fbpx
Homeபிற செய்திகள்மகளிர் கால்பந்து போட்டியில் கிக் இட் அவுட் அணி வெற்றி

மகளிர் கால்பந்து போட்டியில் கிக் இட் அவுட் அணி வெற்றி

நீலகிரி மாவட்ட கால்பந்து சங்கமும் யுனைடெட் கல்வி நிறு வனமும்இணைந்து மாவட்ட அளவிலான மகளிருக்கான கால்பந்து போட்டியை நடத்தின.

அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் நேற்று நடைபெற்றன. போட்டி யில் கிக் இட் அவுட் அணியினரும் நீலகிரி ப்ளூஸ் அணியினரும் மோ திய இறுதிப் போட்டியில் 2 க்கு 0 என்ற கோல் கணக்கில் கிக் இட் அவுட் அணியினர் வெற்றி பெற்றனர்.

வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசுக் கோப்பையை அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் மேட்ச் கமிஷனர் மசார் அகமது, ஐ.எஸ்.எல் மேட்ச் கமிஷனர் ரதீஷ், யுனை டெட் கல்வி குழுமத்தின் தாளாளர் சண்முகம், உடற்கல்வி இயக்குனர் ரவிச்சந்திரன் ஆகியோர் வழங்கினார்கள்.

சிறந்த வீரருக்கான பரிசினை கிக் இட் அவுட் அணியைச் சேர்ந்த நிவேதா, நீலகிரி ப்ளூஸ் அணியைச் சேர்ந்த சந்தியா ஆகியோருக்கு நீலகிரி மாவட்ட கால்பந்து சங்கத்தின் துணைத் தலைவர் மனோ, பொருளாளர் நாகராஜ் ஆகியோர் பரிசுகளை வழங்கி கௌரவித்தனர்.

போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் நீலகிரி மாவட்ட கால்பந்து சங்கத்தின் செயலாளர் மோகன் முரளி செய்திருந்தார்.

படிக்க வேண்டும்

spot_img