கொரோனா சிறப்பு உதவித் தொகை வழங் கக்கோரி ஊரக வளர்ச்சி மற்றும் உள் ளாட்சித்துறை தமிழ் நாடு கொசு ஒழிப்பு களப்பணியாளர் நலச் சங்கம் சார்பில் மாவட்ட கலெக்டர் விசாகனிடம் மனு அளிக்கப்பட்டது.
மாநில செயலாளர் தயாளன் தலைமையில் பணியாளர்கள் கலெக்ட ரிடம் மனு அளித்தனர். அதில் தெரிவித்துள்ளதாவது:
ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை தமிழ்நாடு கொசு ஒழிப்பு களப்பணியாளர் 260 பேர் திண்டுக்கல் மாவட் டத்தில் பணியாற்றி வருகிறோம்.
தமிழக முதல்வர் அறிவித்த மருத்துவத்துறைக்கான கொரோனா சிறப்பு ஊக்கத் தொகை கடந்த மே 2021 முதல் வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால் கொசு ஒழிப்பு பணியாளர்களும், நாங்க ளும் அந்த காலகட்டத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஆய்வக தொழில் நுட்ப வல்லுனர்களுடன், கொரோனா காலத்தில் வீடு, வீடாகச் சென்று காய்ச்சல், சளி, இருமல் என நோய்களை கண்டறிவது, வீடுகளுக்கு சென்று கிருமி நாசினி தெளிப்பது உட்பட பல்வேறு பணிகளை செய் துள்ளோம்.
மேலும் 108 வாகனத்தில் நோயாளிகளை ஏற்றி அரசு பொது மருத் துவமனைக்கு அனுப்பி வைக் கும் பணிகளையும் செய் தோம். அதனால் முதல்வர் அறிவித்த கொரோனா சிறப்பு ஊக்கத் தொகை எங்களுக்கும் வழங்க வேண்டும்.
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொசு ஒழிப்பு பணியில் கடந்த 15 ஆண்டுகளாக பணிபுரிந்து வரு கிறோம். எங்களுக்கு தினந் தோறும் ரூ.402 தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வருகிறோம். எங்களுக்கு ரூ.500 ஆக உயர்த்தி தரவேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்திருந்தனர்.