கோவை ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியின் வைரவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடந்த மாபெரும் வினாடி-வினா போட்டியில், யுவபாரதி பப் ளிக் பள்ளி முதல் பரிசை தட்டிச் சென்றது.
போட்டிகளில் ஸ்டேன்ஸ் சகோதரப் பள்ளிகள் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து மாணவர்கள் பங்கேற்றனர்.
மாணவர் தலைவர் ஷெர்வின் சாமுவேல் இறை வழிபாடு நிகழ்த் தினார். பள்ளி துணை முதல்வர் பிரி யா சீன் வரவேற்றார்.
மூத்த ஆசிரியர் ஆண்டனி ராஜ், சிறப்பு விருந்தினர் சைலேந்திர பன்சாலியை அறிமுகம் செய்தார்.
பள்ளித் தாளாளர் பிலிப் ஆர்.ஜே.பவுலர் சிறப்பு விருந்தினருக்கு நினை வுப் பரிசு வழங்கினார்.
போட்டிகள் இரு சுற்றுகளாக நடந்தன. தகுதிச் சுற்றில் வென்ற ஆறு அணிகள் இறுதிச் சுற்றில் பங் கேற்றன.
யுவபாரதி பொதுப்பள்ளி முதல் பரிசையும், எஸ்.பி.ஓ.ஏ.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 2, 3-வது பரிசுகளை பெற்றன. வென்ற அணிகளுக்கு கேடயங் களும், பரிசுகளும் வழங்கப்பட்டது.
மாணவர் தலைவி ஷேண்ட்ரா நன்றி கூறினார். பள்ளி முதல்வர் செலின் வினோதினி, போட்டியை நடத்திய ஆசிரியர்களையும், மாணவர்களையும் வாழ்த்தினார்.