கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு எதிராக ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களின் கூட்டமைப்பினர் மூலம் நாளை முதல் நடைபெறும் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்திற்கு அருந்ததியர் முன்னேற்ற கழகம் தமிழ்நாடு , தேசிய தாழ்த்தப்பட்டோர் மக்கள் நல உரிமை இயக்கம் தமிழ்நாடு , ஜனசக்தி லேபர் யூனியன் , முத்தழிழ் அறிஞர் கலைஞர் துப்புரவு மற்றும் பொது பணியாளர்கள் முன்னேற்றச் சங்கங்கள் கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு ஆதரவாக மேற்படி , பொது வேலை நிறுத்தப்போராட்டத்தில் பங்கேற்காது என தெரிவித்து எழுத்து பூர்வமாக மாநகராட்சி ஆணையாளர் அவர்களுக்கு கடிதம் அளித்துள்ளனர்.
எனவே , பணிக்கு வரும் தூய்மைப் பணியாளர்களை பணி செய்ய விடாமல் தடுத்தாலோ , அல்லது அவர்கள் மீது சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டாலோ காவல் துறையினர் மூலம் சட்ட ரீதியான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது என மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.