fbpx
Homeபிற செய்திகள்வரவேற்கத்தக்க அறிவிப்பு

வரவேற்கத்தக்க அறிவிப்பு

இந்தியா முழுவதும் 2023ம் ஆண்டுக்குள் 5ஜி அலைவரிசை சேவை வழங்கப்படும் என்ற செய்தி மகிழ்ச்சியை அளிக்கிறது.

இந்தியாவில் முதன் முறையாக 5ஜி அதிவேக இணைய சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

முதல் கட்டமாக குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டும் 5ஜி சேவை அமலுக்கு வருகிறது. பல்வேறு தொலை தொடர்பு நிறுவனங்கள் அடுத்த 2ஆண்டுகளுக்குள் நாடு முழுவதும் 5ஜி சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளன.

தற்போது செயலில் உள்ள 4ஜி சேவையை விட பல மடங்கு வேகத்தில் வீடியோக்களை பதிவிறக்கம் செய்ய, தரவுகளைப் பரிமாற 5ஜி சேவை உதவும் என்று கூறப்பட்டுள்ளது.

டிஜிட்டல் என்பது நாட்டின் வளர்ச்சிக்கான திட்டமாகும். நாட்டை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு கொண்டு செல்வதில் 5ஜி இணைய சேவை மிக முக்கிய பங்கு வகிக்கும்.

மேலும் 5ஜி சேவை மூலமாக இந்தியா உலகளவில் தலை சிறந்த நிலையை எட்டும் காலம் வெகுதூரத்தில் இல்லை என்று தைரியமாக கூறலாம்.

படிக்க வேண்டும்

spot_img