fbpx
Homeபிற செய்திகள்ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரிக்கு ‘நாரி சக்தி’ விருது

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரிக்கு ‘நாரி சக்தி’ விருது

ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவியர் ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தானில் தேசிய அளவில் வெற்றி பெற்றனர்.

நாடெங்கிலும் இருந்து சுமார் 2000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்ற இப்போட்டிகளில், ஸ்ரீ இராம கிருஷ்ணா மகளிர் கல்லூரியின் கணினி அறிவியல் மற்றும் மைக்ரோபையாலஜி துறைகளின் சார்பில் நான்கு அணிகள் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றன.

அதில் கணினி அறிவியல் துறையின் ஆக்மெண்டெட் ரியாலிட்டி (AR) தொடர்பான செயலியை உருவாக்கும் திட்டமானது இறுதிச்சுற்றில் கலந்து கொண்ட 34 அணிகளுக்குள் வெற்றி பெற்று இருபதாயிரம் ரூபாய்ப் பரிசையும் ‘நாரி சக்தி’ விருதையும் வென்றனர்.

அணியில் மாணவிகள் பி.அபி, எஸ்.ஆர்த்தி, எஸ்.அர்ச்சனா, என்.பவித் ரா பி.கார்த்திகா, கே.ஜெயவர்ஷினி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

கணினி அறிவியல் துறை இணைப் பேராசிரியர் டி.அனிதா மாணவிகளை வழி நடத்தினார்.வெற்றி பெற்ற மாணவியரையும் உறுதுணையாக இருந்த பேராசிரியரையும் எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டி.லட்சுமிநாராயணசாமி, கல்லூரி முதல்வர் முனைவர் கி.சித்ரா மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.

படிக்க வேண்டும்

spot_img