fbpx
Homeபிற செய்திகள்கப்பல் போக்குவரத்து கட்டணங்கள் அதிகரிப்பால் தோட்ட விளைபொருட்கள் ஏற்றுமதி பாதிப்பு- தோட்டத்தொழிலதிபர் சங்க ஆண்டு விழாவில்...

கப்பல் போக்குவரத்து கட்டணங்கள் அதிகரிப்பால் தோட்ட விளைபொருட்கள் ஏற்றுமதி பாதிப்பு- தோட்டத்தொழிலதிபர் சங்க ஆண்டு விழாவில் தகவல்

கோவையில் தமிழ்நாடு தோட்டத் தொழிலதிபர் சங்கத்தின் 69-வது ஆண்டு விழா நடந்தது.இதில் சங்கத் தலைவர் அருண்குமார் பேசியதாவது:
ரஷியா – யூக்ரேன் போர் சூழல், கப்பல் போக்குவ ரத்திற்கான கட்டண விகிதங்கள் பன்மடங்கு அதிகரிப்பு ஆகியவை, தோட்ட விளைபொருட்கள் ஏற்றுமதியை பெருமளவு பாதிப்பிற்கு உள்ளாக்கியுள்ளது.

உலகெங்கும் தேயிலை உற்பத்தி அளவு கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், சந்தை விலைகள் சரிவடைந்து வருகின்றன.

தோட்ட விளைபொருட்கள் உற்பத்தியில் தொழிலாளர் ஊதியம் மற்றும்அதனைச் சார்ந்த செலவுகள் 65% ஆக அமைந்துள்ளதால், இதனை கருத்தில் கொண்டு, தோட்டத்தொழிலாளர் ஊதிய விகிதம் உரிய முறையில் நிர்ணயம் செய்ய ஏதுவாக, ஆலோசனைக்குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம்.

ஆனால், இதன்மீது அரசு தரப்பில் சாதகமான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. தொழிலாளர் நலன் என்பது மட்டுமல்லாமல், தொழிலின் எதிர்காலம் என்பதையும் கணக்கில் கொண்டு சம்பள நிர்ணயம் செய்யப்படவேண்டும் என்பதே வேலையளிப்போரின் நியாயமான கோரிக்கையா கும்.

தோட்டத்தொழிலில் குறிப்பிட்ட விளைபொருட்கள் மட்டுமே பயிரிடப்பட வேண்டும் என்ற தற்போதைய சட்ட நிலையை மாற்றம் செய்து, மலைப்பகுதி சுற் றுலா மையம் போன்ற புதிய ஏற்பாடுகளை தோட்ட நிறுவனங்கள் துவங்கிட அரசு உரிய சட்டத்திருத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

அப்போதுதான் தோட்டப்பகுதிகளில் உள்ள படித்த இளைஞர்களுக்கு புதுமையான வேலை வாய்ப்புகளை உருவாக்கி வழங்க இயலும். இப்பகுதிகளிலிருந்து மக்கள் கூட்டமாக வெளியேறு வதை தடுக்க இதுபோன்ற நவீன முயற்சிகள் ஏதுவாக இருக்கும்.

கேரளா, அஸ்ஸாம், மேற்கு வங்காளம் போன்ற பிற தோட்டத்தொழில் மாநிலங்கள் இதற்கேற்றவாறு சட்ட திருத்தங்களை கொண்டு வந்துள்ளன.
தோட்ட நிறுவனங்கள் யூரியா, எம்.ஓ.பி. போன்ற ரசாயன உரங்களின் தட்டுப் பாட்டால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

மலைப்பகுதியில் அமைந் துள்ள அரசுக்கு வரி வருமானம் ஈட்டித் தருகின்ற தோட்ட விளைபொருட்களுக்கு தேவையான உரத் தேவையை தங்கு தடை யின்றி பெற்றிட அரசு வேளாண்துறை உடனடி யான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோவை மாவட்டம் வால்பாறை தாலுகாவில் உள்ள தோட்ட நிறுவனங் களின் முழு உடமை மற்றும் ஆளுமையிலுள்ளவிளை நிலங்களின் பகுதியான பல்வகை நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட மாட்டாது என்ற நிலைப்பாடு ஏற்புடையதல்ல.
இதன் காரணமாக எழுந்துள்ள வழக்கு வியா ஜியங்களை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், அரசு உரிய நிர்வாக நடவ டிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்.

மாவட்ட ஆட்சியர்க ளின் தலைமையில் செயல்படும் மாவட்ட வனக் குழுக்களின் செயல்முறை நடவடிக்கைகள் உரிய கால அளவுக்குள் முடிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

புதிய நிர்வாகிகள்
முன்னதாக, குன்னூரில் உள்ள மதேசன் பொசான்குட் என்டர்ப் ரைசஸ் (பி) லிமிடெட் நிறுவனத்தின் முதுநிலை பொது மேளாளர் டி.ஜே. வர்கீஸ் வைத்யன், சேலம் மாவட்டம் ஏற்காடு கந்தையா காபி எஸ்டேட் அதிபர் வினோதன் கந்தையா ஆகியோர் 2022-23 வருடத்திற்கான, தமிழ்நாடு தோட்டத்தொழிலதிபர் சங்கத்தின், தலைவர், துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டனர்.

பிற நிர்வாக உறுப்பினர் கள்: சி.ஸ்ரீதரன், அஸ்கர் ஹூசைன், அருண்குமார், பி.பி.ஆச்சையா, அனில் ஜார்ஜ் ஜோசப், சந்தீப் சிங் சித்து, கே.ஜே.மகேஷ் நாயர், பி.அம்பலத்தரசு, ஆர்.ராஜ்குமார், ரஞ்சித் கட்டாபுரம், கே.எஸ்.நஞ்சப்பா, முரளிபாலன் படிக்கல், எஸ்.ராமச்சந்தி ரன், ஷகீர் நாகராஜன், ஜோ ஆன்டனி, டி.ஜெயராம், பிரசாந்த் பன்சாலி, அனில் மாத்யூ.

படிக்க வேண்டும்

spot_img