fbpx
Homeபிற செய்திகள்ஆழியார், கோட்டூரில் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் 429 வீடுகள் ரூ.21.46 கோடியில் புதுப்பிப்பு- கோவையில்...

ஆழியார், கோட்டூரில் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் 429 வீடுகள் ரூ.21.46 கோடியில் புதுப்பிப்பு- கோவையில் மறுவாழ்வுத் துறை ஆணையர் தகவல்

கோவை மாவட்டம் ஆழியார் மற்றும் கோட்டூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில், பழுதடைந்த 429 வீடுகள் ரூ.21.46 கோடி செலவில் புதிதாக கட்டும் பணி நடைபெற்று வருகிறது என்று மறுவாழ்வுத் துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் தெரிவித்தார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்டத்தில் ஒன்றிய அரசினால் நிதியுதவி அளிக்கப் பட்ட திட்டங்கள் குறித்து, ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் ஸ்ரீ அஜய் குமார் மிஷ்ரா தலைமையில் ஆய்வு கூட்டம் கடந்த 8-ம் தேதி நடைபெற்றது.

இக்கூட்டத்தில் இணை செயலாளர் சஞ்சீவ் சேகல், மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கு.சண் முகசுந்தரம், மாநகர காவல் ஆணையர் வி.பாலகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.பத்ரி நாராயணன், மாவட்ட வருவாய் அலுவலர் ப்பி.எஸ்.லீலா அலெக்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கிற இலங்கைத் தமிழர்களிடம் தேவையான வசதிகள், கருத்துகள் மற்றும் குறைகளை ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் ஸ்ரீஅஜய் குமார் மிஷ்ரா கேட்டறிந்தார்.

பின்னர் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்களுக்கு பொன்னாடை போர்த்தி சிறப்பித்தார். இக்கூட்டத்தில் மறுவாழ்வுத் துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் பேசியதாவது:

அரசினால் பல்வேறு திட்டங்கள் மற்றும் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் ஒன்றிய அரசினால் நிதியுதவி அளிக்கப்பட்ட திட்டங்கள் குறித்து, துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடத்தப் பட்டுள்ளது.

இலங்கைத் தமிழ் அகதிகள் முகாமின் பெயரினை இலங் கைத் தமிழர் மறுவாழ்வு என மாற்றப்பட்டுள்ளது. புலம்பெயர்ந்த தமிழர்களின் மறுவாழ்வு மற்றும் நல ஆணையரகம், வெளிநாடு வாழ் தமிழர் கள் நல ஆணையரகமாக மாற்றப் பட்டுள்ளது.

தற்போது 106 இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு முகாம்கள் தமிழ்நாட்டில் உள்ளன. அதில் 59,000 இலங்கைத் தமிழர்கள் வசிக்கின்றனர்.

கோவை மாவட்டத்தில் 4 இலங்கைத் தமிழர்கள் மறு வாழ்வு முகாம்கள் உள்ளன. மேட்டுப்பாளையம், வேதார் காலனியில் 723 இலங்கைத் தமிழர்களும், பேரூர், பூலுவப்பட்டியில் 885 இலங்கைத் தமிழர்களும், ஆனைமலை, கோட்டூரில் 613 இலங்கைத் தமிழர்களும், ஆனைமலை, ஆழியாரில் 781 இலங்கைத் தமிழர்களும் என மொத்தம் 3002 இலங்கைத் தமிழர்கள் வசிக்கின்றனர்.

மறுவாழ்வு மற்றும் தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழர்கள் நலத்துறை சார்பில், ஆழியார் மற்றும் கோட்டூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் பழுதடைந்த 429 வீடுகள் ரூ.21.46 கோடி செல வில் புதிதாக கட்டும் பணி நடை பெற்று வருகிறது.

இலங்கை தமிழர் மறு வாழ்வு மையத்தில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு பல் வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இலங்கைத் தமிழர்களிடம் தேவையான வசதிகள், கருத்துகள் மற்றும் குறைகள் கேட்டறியப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் ஒன்றிய அரசினால் நிதியுதவி அளிக்கப்பட்ட திட்டங்களின் பணிகளை விரைந்து முடித்திட தேவையான நடவடிக்கைகளை துறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் ஸ்ரீ அஜய் குமார் மிஷ்ரா பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா, பிரதான் மந்திரி கௌஷல் விகாஸ் யோஜானா, பெண் குழந்தையைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம், அடல் பென்ஷன் யோஜனா, பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா, மேக் இன் இந்தியா, தூய்மை பாரத இயக்கம், சன்சாத் ஆதர்ஷ் கிராம் யோஜனா, பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா, ஆயுஷ்மான் பாரத் யோஜனா, பிரதான் மந்திரி முத்ரா யோஜனா, பிரதான் மந்திரி ஆதர்ஷ் கிராம் யோஜனா, பிரதான் மந்திரி கிராமின் அவாஸ் யோஜனா, பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா, பாரத பிரதமரின் ஊரக சாலைகள் மேம்பாடு, ஸ்வாமித்வா யோஜனா, தேசிய டிஜிட்டல் ஹெல்த் மிஷன் உள் ளிட்ட திட்டங்களின் பணிகள் குறித்து துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

படிக்க வேண்டும்

spot_img